Cumin Seeds in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் சீரகம் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். நம் அனைவரின் வீட்டு சமையலறையில் இருக்க கூடிய ஒரு உணவு பொருள் தான் சீரகம். இந்த சீரகம் உணவு பொருளாகவும் நறுமணம் நிரம்பிய மூலிகை பொருளாகவும் இருக்கின்றது. அதேபோல சீரகம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் சீரகம் பற்றிய வரலாறு உங்களுக்கு தெரியுமா..? இன்று இந்த பதிவின் மூலம் சீரகம் பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சீரகம் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா.? |
சீரகம்:
இது உணவுகளில் பயன்படுத்த கூடிய ஒரு உணவு பொருள் ஆகும். சீரகம் அசை அல்லது நற்சீரகம் என்று அழைக்கப்படுகிறது. சீரகம் மருத்துவ குணமிக்க மூலிகை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சீரகம் வட இந்தியாவின் மலைப்பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படும் தாவரம் ஆகும். மத்திய ஆசியா , தென்மேற்கு ஆசியா அல்லது கிழக்கு மத்தியதரைக் கடலில் தோன்றிய தாவரம் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
இது லத்தின் மொழியில் குமினியம் சைமினம் என்று அழைக்கப்படுகிறது. சீரகம் அபியாசியே குடும்பத்தில் ஒரு பூக்கும் மூலிகை தாவரமாகும். இந்த சீரகம் இரானோ டுரேனியன் பிராந்தியம் என்ற இடத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ளது.
பண்டைய கிரேக்க மக்கள் சீரகத்தை அதிகளவு உற்பத்தி செய்திருக்கிறார்கள். சீரகம் வோக்கோசு குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் என்றும் சொல்லபடுகிறது.
சீரகத்தின் அமைப்பு:
குமினியம் என்ற செடியில் இருந்து கிடைக்க கூடிய உலர்ந்த விதை தான் சீரகம். இந்த சீரக விதைகள் 12.20 செ.மீ அங்குலத்தை கொண்டுள்ளது. இது 30.50 மீட்டர் வரை வளரக் கூடிய தன்மையை கொண்டுள்ளது.
சீரகம் கையால் அறுவடை செய்ய கூடிய தாவரமாகும். இது 20-30 செமீ உயரம் மற்றும் 3-5 செமீ விட்டம் கொண்ட மெல்லிய உரோமங்களற்ற கிளைத்த தண்டு கொண்ட மூலிகை தாவரமாகும்.
இந்த செடியின் இலைகள் 2.5 அங்குலத்தையும், 5.10 செ.மீ நீளத்தையும் கொண்டுள்ளது.
இந்த சீரக செடியில் ஒவ்வொரு கிளைக்கும் இரண்டு முதல் மூன்று துணைக் கிளைகள் காணப்படுகின்றன. இந்த செடியின் அனைத்து கிளைகளும் ஒரே அளவிலான உயரத்தை கொண்டுள்ளது.
சீரக செடியின் தண்டு சாம்பல் அல்லது அடர் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இதன் பூக்கள் சிறிய அளவிலும் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.
சீரகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |