இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

Death Dream Meaning in Tamil

இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்..? Death Dream Meaning in Tamil..!

Death Dream Meaning in Tamil:- பொதுவாக கனவுகள் என்பது நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது பலவகையான கனவுகள் வரும். அந்த வகையில் நமக்கு பிடித்தவர்கள், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று இவர்களில் யாராவது இறந்து போவது போல் கனவு வரும். இவ்வாறு உயிருடன் இருப்பவர் இறந்தது போல் கனவு கண்டால் நமக்கு மிகவும் கஷ்டமாகவும், அவர்களுக்கு மரணம் ஏற்படுமோ என்று மிகவும் பயமாக இருக்கும். இருப்பினும் உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு (irapathu pol kanavu palangal in tamil) காண்பது ஒன்றும் பயப்படவேண்டிய விஷயம் இல்லை என்று கனவு சாஸ்திரங்கள் கூறுகின்றது.

சரி இதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி அதாவது உயிருடன் இருப்பவர் இறந்து போவது போல் கனவு வந்தால் அதற்கு என்ன பலன்? என்பதை பற்றி இப்பதிவில் நாம் தெளிவாக படித்தறியலாம் வாங்க.

கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..!

Iranthu Povathu Pol Kanavu Vanthal..! oruvar irapathu pol kanavu kandal..! இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? Irapathu Pol Kanavu Vanthal..!

நமக்கு பிடித்தவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் / nerukamanavar irapathu pol kanavu kandal ena palan

நமக்கு மிகவும் பிடித்த மிகவும் நெருக்கமானவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் அவர்களுக்கு இருக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி, மிகவும் மகிழ்ச்சியாக வாழப்போகிறார்கள் என்று அர்த்தமாகும் அல்லது அவர்களுக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனை இருந்தால் அந்த பிரச்சனை குணமாகி அவர் மிகவும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வரை வாழ்வர் என்று அர்த்தமாகும்.

நம் கனவில் நாமே இறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

கனவு காண்பவர்கள் கனவில் அவர்களே இறப்பது போல் கனவு கண்டு அவர்களது இறப்பிற்கு யாரும் வராமலும், யாரும் அழாமலும், அடக்கம் செய்யாதது போல் கனவு வந்தால் கனவு காண்பவர்கள் வீட்டில் அறைகள் அல்லது தூண்கள் உடையப்போவதை  உணர்த்தும். அதேபோல் அவர்களுக்கு ஆயுள் காலம் அதிகம் என்பதையும் குறிக்கும்.

தங்களுடைய கனவில் தாங்கள் இறந்திருப்பது போல் நடித்தால் அது தங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு புதிய மாற்றத்தை தொடங்க இருப்பதையும், தங்கள் வாழ்வில் புதிய மாற்றங்களையும் சந்திக்க போகிறார்கள் என்று இந்த கனவு உணர்த்துகிறது.

கனவில் பிறர் இறந்திருப்பது போல் நடித்தால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் மற்றவர்களிடமிருந்து ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

உயிருடன் இருக்கும் உறவினர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்?

தங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் யாராவது இறப்பது போல் கனவு வந்தால் அந்த கனவு அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம் இல்லை. இருப்பினும் தங்கள் உறவினர்களால் தங்கள் வாழ்வில் மாற்றத்தை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தமாகும். மேலும் அவர் சில மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும், இனி தாங்கள் நினைத்தது போல் அவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதை உணர்த்தும்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

நண்பர்கள் மரணமடைவது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் யாராவது இறப்பது போல் கனவு கண்டால். அவர்களை அதிகளவு விரும்புகிறீர்கள் என்றும், அவர்கள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும். தங்கள் நட்பின் பிரிவினால் இதுமாதிரியான கனவு வரலாம் எனவே அவர்களை சந்தித்து பேசினால் இது போன்ற கனவுகள் திரும்ப வராது.

தாயின் மரணம்:-

தங்கள் தாய் இறப்பது போல் கனவு கண்டால் அது தாயுடன் இருக்கும் உறவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட போகிறது என்றும் அல்லது அவர்கள் மீது வைத்திருக்கும் கண்ணோட்டம் மாறப்போகிறது என்பதை குறிக்கிறது. எனவே இந்த கனவு தங்களின் உறவில் விரிசல் அல்லது பிரிவினை ஏற்படுத்தலாம்.

கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் / kanavan erapathu pol kanavu?

oruvar irapathu pol kanavu kandal: நாம் மிகவும் நேசிப்பவர்கள் மரணம் அடைவது போல் கனவு கண்டால், தங்கள் துணையிடம் அவர்கள் எதிர்பார்க்கும் குணங்களில் ஏதோ ஒரு குறை உள்ளது என்பதை உணர்த்தும் கனவாகும்.

தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..! கெட்ட சகுனமா..!

 

இறப்பு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்றாலும் இறப்பு சம்மந்தமான கனவுகள் நாம் காணும் பொழுது அது நமக்கு எந்த வகையிலும் மரணத்தை ஏற்படுத்தாது என்று அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil