யூகலிப்டஸ் மரம் பற்றிய தகவல்..! | Eucalyptus Tree in Tamil

Advertisement

யூகலிப்டஸ் மரம் பற்றிய தகவல்..! | Eucalyptus Tree in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் பயன்படும் மிகவும் பயனுள்ள ஒரு தகவலை பற்றி தான். அது என்னவென்றால் யூகலிப்டஸ் மரம் பற்றிய தகவல் தான். இந்த யூகலிப்டஸ் மரம் பற்றி நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும் ஆனால் அந்த மரம் பற்றிய முழுத்தகவலும் தெரிந்திருக்காது. அதனால் அந்த மரத்தை பற்றிய முழுத்தகவல்களையும் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.

Eucalyptus Tree in Tamil :

Eucalyptus in tamil

வேறுபெயர் மற்றும் பிறப்பிடம்:

யூகலிப்டஸ் மரம் என்பதற்கு தைல மரம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த தைல மரம் மிர்டேசி (Myrtaceae) என்ற தாவர குடும்ப வகையைச் சேர்ந்த தாவரமாகும்.

இந்த தைல மரம் ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இந்த தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காக பலரால் விரும்பி பயிரிடப்பட்டது. இந்த யூகலிப்டஸ் மரத்தில் 700-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளது.

பண்புகள்:

இந்த தைலமரமானது பல்வேறு வகையான மண் மற்றும் காலநிலைகளிலும் வளரும் இயைபுடையவை. குறிப்பாக 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புக் கொண்டவை.

மேலும் இந்த மரம் வறண்ட மற்றும் சமவெளிப்பகுதியிலும் வளரும். இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஆண்டு மழையளவு குறைந்த பட்சம் 800 மி.மீ. தேவைபடும். இம்மரமானது வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக்கூடியது.

இந்த தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்ட இம்மரமானது 8 மணி நேரத்திற்கு தேவையான நீரையும் மற்ற சத்துக்களையும் மண்ணிலிருந்து நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது.

மேலும் இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் கொண்டவை. இம்மரமானது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும்.

பயன்கள் :

இந்த யூகலிப்டஸ் மரத்தின் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பதால் ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

தேவதாரு மரம் பற்றி தெரிந்து கொள்வோமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement