Online-யில் GST Registration செய்வது எப்படி? GST Registration in Tamil..!
GST registration in tamil:-
இன்று நாம் GST Registration செய்வது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அதற்கு முன் GST என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நாம் அரசாங்கத்திற்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக செலுத்தக்கூடிய வரிகளைத்தான் GST (அ) சரக்கு மற்றும் சேவை வரிகள் என்று சொல்வார்கள். இந்த GST சான்றிதழ், வியாபாரத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.
சரி இப்போது Online-யில் GST Registration செய்வது எப்படி? என்பதை பற்றி படித்தறிவோம் வாங்க…
Online-யில் GST Registration செய்வது எப்படி?
GST Registration in Tamil step: 1
reg.gst.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
அவற்றில் services என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது அவற்றில் Registration என்பதில் New Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது ஒரு புதிய பேஜ் திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய விவரங்களை உள்ளிடவேண்டும்.
i am a என்ற இடத்தில் taxpayer இருந்தால் taxpayer என்பதை தேர்வு செய்யுங்கள். இல்லையெனில் தாங்கள் என்னவாக உள்ளீர்களோ அவற்றை தேர்வு செய்து கொள்ளவும்.
பிறகு அவற்றிலேயே தங்களுடைய மாநிலம், மாவட்டம், Legal Name of the Business (As mentioned in PAN), Permanent Account Number (PAN), Email Address, Mobile Number ஆகிய விவரங்களை உள்ளிட்ட பின்பு PROCEED என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் Email Address, Mobile Number இரண்டிற்கும் OTP எண் அனுப்பப்படும். அவற்றை OTP will be sent to this Email Address, Separate OTP will be sent to this mobile number என்பதில் டைப் செய்யுங்கள்.
GST Registration in Tamil step: 2
இப்பொழுது தங்களுடைய OTP எண் VERIFY செய்யப்படும். பின்பு PROCEED என்பதை கிளிக் செய்யுங்கள்.
PROCEED என்பதை கிளிக் செய்தபின் உங்களுக்கு ஒரு Temporary Reference Number (TRN) ஒன்று காட்டப்படும் அவற்றை நோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்பு PROCEED என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது மறுபடியும் GST HOME-க்கு செல்லும்.
GST Registration in Tamil step: 3
மறுபடியும் அவற்றில் services என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது அவற்றில் Registration என்பதில் New Registration என்ற ஆப்ஷனை கிளிக் செயுங்கள். பின் அவற்றில் Temporary Reference Number (TRN) என்பதை கிளிக் செய்யுங்கள். அவற்றில் தங்களுக்கு வழங்கப்பட்ட TRN எண்ணை டைப் செய்யுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ஜா எண்ணினை டைப் செய்து PROCEED என்பதை கிளிக் செய்யுங்கள்.
GST Registration in Tamil step: 4
அதன்பிறகு மறுபடியும் தங்களுடைய Email Address, Mobile Number இரண்டிற்கும் OTP எண் அனுப்பப்படும் அவற்றில் ஏதேனும் ஒரு OTP எண்ணினை அவற்றில் டைப் செய்து திருப்பவும் PROCEED என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதுவரை நம் பொதுநலம் பகுதியை பார்வையிடுங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information In Tamil |