Handwriting Personality Test in Tamil
கையெழுத்து அழகா இருந்தால் தலையெழுத்து நல்லா இருக்காது. மற்றும் கையெழுத்து அழகா இல்லையென்றால் தலையெழுத்து அழகா இருக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் ஜோதிட படி ஒருவரின் கையெழுத்தை வைத்து அவர்களின் தலையெழுத்தை கணக்கிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் உங்களின் கையெழுத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ S என்ற வார்த்தையில் பெயர் கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!
குண்டு குண்டாக எழுதுபவர்கள்:
பெரிய எழுத்தாக எழுதுபவர்கள் தங்களை புத்திசாலி என்று நினைத்து அவர்களே பெருமை படுத்தி கொள்வார்கள். மேலும் இவர்கள் கூட இருப்பவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று சுயநலமாக இருப்பார்கள்.
சிறியதாக எழுதுபவர்கள்:
சிறியதாக எழுதுபவர்கள் மிகுந்த ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் கவனமாக செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் செய்கின்ற வேலையை சரியாக செய்து வெற்றி அடைவார்கள்.
நேராக எழுதுவது:
இவர்கள் இந்த செயல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் யாரு என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எதிர்காலத்தை பற்றி நினைத்து யோசிக்க மாட்டார்கள். இப்பொழுது என்ன நடக்கிறோதோ அதை மட்டும் நினைத்து கொண்டிருப்பார்கள். எந்த விஷயத்தையும் மறக்க மாட்டார்கள். ஞாபக சக்தி மிகுந்து காணப்படும்.
ஒரே எழுத்து அளவில் எழுத மாட்டார்கள்:
இவர்கள் ஈஸியான வேலையை செய்வதற்கு கூட செய்ய மாட்டார்கள். சோம்பேறி உணர்வு இவர்களிடம் அதிகமாக காணப்படும். ஒரு செயலை கொடுத்து இவர்களிடம் செய் என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்து விடுவார்கள் என்று நினைத்தால் அது தவறானது. இவர்களை நம்பினால் நடு ஆற்றில் தான் இருக்கனும். இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க மாட்டார்கள்.
எழுத்தை சரியான இடைவெளியில் எழுதுபவர்கள்:
ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் சரியான இடைவெளி விட்டு எழுதுபவர்கள் எந்த நிலையிலும் சமமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் பழகும் போது பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரி பழகுவார்கள். மேலும் இவர்களுக்கு எளிமையாக இருப்பது மிகவும் பிடிக்கும்.
எழுத்தை அதிக இடைவெளி விட்டு எழுதுவது:
ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் அதிக இடைவெளி விட்டு எழுதுபவர்கள் யாரிடமும் நெருக்கம் ஆக மாட்டார்கள். இவர்களுக்கு Close Friend என்று யாரும் இருக்க மாட்டார்கள். இவர்களின் கண் முன்னாடி தெரிந்தவர்கள் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். நாம் உண்டு நாம் உண்டு என்று இருப்பார்கள். படத்தில் சொல்வது போல இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டு போக வேண்டும் என்பது போல இருப்பார்கள்.
எழுத்தை குறைவான இடைவெளி விட்டு எழுதுவது:
இவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பழக வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் நெருங்கி பழகினாலும் இவர்களை பற்றிய செய்திகளை சொல்ல மாட்டார்கள். மற்றவர்களை பற்றி தான் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |