அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி.? How To Apply For Unorganized Workers..!

Advertisement

ஆன்லைனில் அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு செய்வது எப்படி | How To Register Unorganized Workers In Tamil Nadu

How To Register In Unorganized workers / Amaippu Sara Tholilalar Nala Variyam: இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் எப்படி பதிவு செய்யலாம் என்ற விவரங்களை பார்க்கலாம். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இப்போது தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வெப்சைட் வெளியிட்டுள்ளது. சரி வாங்க ஆன்லைன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் எப்படி பதிவு செய்யலாம்னு படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme

ஆன்லைனில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு செய்வது எப்படி:

Step 1:

How To Register In Unorganized workers

முதலில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு செய்ய labour.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

ஆன்லைன் பத்திர பதிவு செய்வது எப்படி

Step 2:

How To Register In Unorganized workers

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்றதும் கடைசியில் “Online services” என்று இருக்குமிடத்தில் கர்சரை வைக்கவும். அவற்றில் “Login” என்பதை கிளிக் செய்யவும்.

Step 3:

How To Register In Unorganized workers

ஆன்லைனில் அப்ளை செய்ய username, Password கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் கீழே இருக்கும் “தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்ய” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 4:

How To Register In Unorganized workers

அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து Send OTP என்று கொடுக்க வேண்டும். OTP எண் வந்த பிறகு அந்த எண்ணை கொடுத்து என்டர் செய்யவும்.

Step 5:

How To Register In Unorganized workers

OTP எண் கொடுத்து என்டர் செய்த பிறகு “Verify OTP” என்பதை கொடுக்கவும்.

Step 6:

How To Register In Unorganized workers

இப்போது Form ஓபன் ஆகும். இதில் சுலபமாக அப்ளை செய்யலாம். இந்த விண்ணப்ப படிவத்தில் முதலில் தனிப்பட்ட விவரம், முகவரி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் வேலை, வங்கி விவரங்கள், கடைசியாக மற்ற விவரங்கள் என்று இருக்கும். அவற்றில் தங்களின் புகைப்படம் Upload செய்யவும்.

Step 7:

How To Register In Unorganized workers

அடுத்து தனிப்பட்ட விவரத்தில் Name Of The worker என்ற இடத்தில் உங்களின் பெயரை ஆங்கிலத்திலும், தொழிலாளியின் பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை குறிப்பிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..! online services list in tamilnadu

Step 8:

How To Register In Unorganized workers

அடுத்து கீழே இருக்கும் வாரியத்தின் பெயரில் நீங்கள் எந்த வாரியத்தில் உள்ளவர்களோ அதை செலக்ட் செய்து கொள்ளவும்.

வாரியத்தை செலக்ட் செய்த பிறகு தந்தையின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.

படிவத்தில் கேட்கும் மொபைல் எண், பாலினம் (ஆண் / பெண்) தேர்ந்தெடுத்து சரியானவற்றை கொடுக்க வேண்டும்.

Step 9:

How To Register In Unorganized workers

அடுத்து பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். பிறகு வயது பதிவேற்ற ஆவணத்தின் வகையில் பிறப்பு, பள்ளி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ பயிற்சியாளர் சான்றிதழ் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்துகொள்ளவும்.

செலக்ட் செய்த பிறகு ஆவணம் என்ற இடத்தில் மேல் கூறப்பட்டுள்ள சான்றிதழை ஏதேனும் ஒன்று புகைப்படம் எடுத்து அப்லோட் செய்யவும்.

Step 10:

How To Register In Unorganized workers

அடுத்ததாக எந்த சாதி என்று குறிப்பிட்டு அதன் சான்றிதழை அப்லோட் செய்யவும்.

Step 11:

How To Register In Unorganized workers

அடுத்து திருமண நிலையை சரியாக பார்த்து கொடுக்க வேண்டும்.

Tamilnadu Amaippu Sara Tholilalar Nala Variyam – Step 12:

How To Register In Unorganized workers

குடும்ப அட்டை எண்ணை சரியாக குறிப்பிட்டு அதனுடைய சான்றிதழை கொடுத்து Next என்பதை கொடுக்க வேண்டும்.

Next கொடுத்த பிறகு முகவரி விவரத்தை குறிப்பிட வேண்டும்.

முகவரி குறிப்பிட்ட பிறகு “Employment Details” அதாவது நீங்கள் நலவாரியத்தில் எந்த பணியில் இருக்கின்றிர்களோ அந்த விவரத்தை குறிப்பிட வேண்டும்.

பணியின் விவரம் கொடுத்த பிறகு வங்கியின் (ACC Num, IFSC Code Num) விவரங்களை கொடுத்து அப்லோட் செய்யவும்.

கடைசியாக other details-ல் தங்களின் போட்டோவை கொடுக்க வேண்டும்.

Amaippu Sara Thozhilalar Sangam – Step 13:

How To Register In Unorganized workers

நீங்கள் அப்ளை செய்ததை check செய்வதற்கு அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று Online Sevice-ல் “Application Status” என்பதில் பதிவு செய்ததை செக் செய்துகொள்ளலாம்.

இந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..! Indian Bank News Tamil..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement