நெயில் பாலிஷை இப்படி தான் வாங்க வேண்டும்.. இல்லையென்றால் பிரச்சனை தான்.!

Advertisement

நெயில் பாலிஷ் வாங்குவது எப்படி.?

பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதற்காக முகத்தில் அப்ளை செய்யும் கிரீம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூ, கைக்கு போடும் மருதாணி, நகத்தில் அப்பளை செய்யும் நெயில் பாலிஷ் என்று அழகுக்காக பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் இரசாயணம் பொருட்கள் கலக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். நீங்கள் அப்படி பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் உங்களை அழகாக அந்த தருணத்தில் காட்டினாலும், நாளடைவில் உங்களது உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அதில் என்னனென்ன விஷயங்கள் பார்த்து வாங்க என்பது அவசியமானது. அதனால் இந்த பதிவில் நெயில் பாலிஷ் வாங்கும் போது எதை பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

நெயில் பாலிஷ் வாங்குவது எப்படி.?

நெயில் பாலிஷ் வாங்குவது எப்படி

பொதுவாக நெயில் பாலிஷ் வாங்கும் போது கலர் மற்றும் விலையை பார்த்து தான் வாங்குவோம். இந்த கலர் போட்டால் கை விறல் அழகாக இருக்குமா என்று தான் பார்த்து வாங்குவோம். உங்கள் கை எப்படி அழகாக இருக்க வேண்டும் என்று பார்த்து வாங்குகிறீர்களோ அதே போல் உடல் ஆரோக்கியமாகவும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாங்குங்கள்.

நெயில் பாலிஷ் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்

நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்கள் மற்றும் உணவுகளில் கெமிக்கல் நிறைந்துகிறது. அதே போல தான் நெயில் பாலிஷிலும் கெமிக்கல் நிறைந்திருக்கிறது.

 நெயில் பாலிஷில் Formaldehyde, Tolunene,Dibutyl phthalate , Formaldehyde resin, camphor போன்ற நிறைய கெமிக்கல் உடலுக்கு தீங்கினை விளைவிக்க கூடியது. Formaldehyde என்ற கெமிக்கலால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. Tolunene கெமிக்கல் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்யும், கண் எரிச்சல், கிட்னி பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். Dibutyl phthalate என்ற கெமிக்கல் சர்க்கரை வியாதி மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படும்.  

நெயில் பாலிஷ் பாட்டில் மூன்று விதமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதல் நெயில் பாலிஷ் பாட்டிலில் என்னென்ன கெமிக்கல் கலந்திருக்கிறது என்று கொடுத்திருப்பார்கள்.

இரண்டாவது கெமிக்கல் Free off என்று கொடுத்திருப்பார்கள்.

 

மூன்றாவதாக Empty பாட்டிலாக சில நெயில் பாலிஷ் இருக்கும். அதில் கெமிக்கல் இருக்கும் என்று இருக்காது, கெமிக்கல் இல்லையென்றும் இருக்காது.

இப்போ எப்படி தான் நெயில் பாலிஷ் வாங்குறது என்று யோசிக்கிறீர்களா.!  உங்களுக்கு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்த்தால் மருதாணியை அரைத்து நகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இல்லை நான் நெயில் பாலிஷ் தான் போடுவேன் என்றால் மேல் கூறப்பட்டுள்ள கெமிக்கல் இல்லாமல் வாங்கி கொள்ள வேண்டும்.  

ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷ் அகற்றலாம்.. எப்படி தெரியுமா?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement