ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி | Aadhar Card Name Change in Tamil

Aadhar Card Name Change Online Tamil

ஆதார் கார்டு பெயர் மாற்றம் செய்வது எப்படி | How to Change Name in Aadhar Card Online Tamil

Aadhar Card Name Change Online Tamil: தற்போதைய கால கட்டங்களில் ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் கார்டானது முக்கியமாகி விட்டது. ஆதார் இல்லாமல் எந்த வித அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. வங்கிக் கணக்கு, பான் எண், வருமான வரிக் கணக்கு போன்ற அனைத்திலும் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதார் அட்டையில் சிலருக்கு பெயர் மாற்றம் அடைந்து வரும். அதை திருத்தம் செய்வது எப்படி என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்கு எங்கு செல்ல வேண்டும், எவ்வளவு செலவாகும் என்ற சந்தேகமும் இருக்கும். அது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

ஸ்டேப் 1: 

முதலில் கூகுள் search-ல் uidai.gov.in என்பதை டைப் செய்யவும். 

ஸ்டேப் 2:

Aadhar Card Name Change Online Tamil

அடுத்ததாக இது போன்ற page ஓபன் ஆகும். அவற்றில் கீழே ஸ்க்ரோல் செய்து Update Demogaphics data Online என்பதை தேர்வு செய்யவும்.

ஸ்டேப் 3:

Aadhar Card Name Change Online Tamil

அவற்றில் Proceed to update aadhar என்பதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப் 4:

Aadhar Card Name Change Online Tamil

how to change name in aadhar card online tamil: இவற்றில் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். ஆதார் எண்ணை பதிவிட்ட பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Captcha எண்ணை சரியாக டைப் செய்து send OTP என்பதை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 5:

ஆதார் எண்ணுடன் இணைத்த மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். வந்த OTP எண்ணை சரியாக என்டர் செய்யவும். 

ஸ்டேப் 6:

அடுத்ததாக update demographics data என்பதை கிளிக் செய்யவும். அடுத்து கீழே scroll செய்து Name என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

ஸ்டேப் 7:

Name என்ற ஆப்ஷனை செலக்ட் செய்த பிறகு கீழே Proceed என்பதை கொடுக்கவும். 

ஸ்டேப் 8:

how to change name in aadhar card in tamil: அடுத்ததாக Terms and Conditions என்பதில் டிக் செய்து Proceed செய்யவும். இப்போது உங்களுடைய ஆதார் கார்டில் உள்ள பெயரானது காட்டப்படும்.

ஸ்டேப் 9:

அடுத்து கீழே enter your name என்பதில் உங்களுடைய சரியான பெயரினை குறிப்பிடவும். அடுத்ததாக Documents என்பதை செலக்ட் செய்து passport, pan Card போன்ற நிறைய documents இருக்கும். அவற்றில் தங்களுடைய சரியான பெயர் எந்த documents-ல் உள்ளதோ அவற்றை கொடுத்து Upload செய்யவும். 

ஸ்டேப் 10:

அடுத்து File manager ஓபன் ஆகும். அவற்றில் நீங்கள் save செய்துள்ள douments அப்லோட் செய்யலாம். அதாவது 2 MB-க்குள் jpeg, png format-ல் இருக்க வேண்டும். 

ஸ்டேப் 11:

அடுத்து கீழே Preview என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் கொடுத்துள்ள பெயரினை ஒருமுறை சரி பார்த்தபிறகு Conform கொடுக்கவும். 5 நிமிடத்தில் உங்கள் ஆதார் கார்டில் உங்களுடைய பெயர் மாற்றம் ஆகிவிடும். 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil