ஆன்லைனில் சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி? How to Get Land Document Copy Online in Tamil..!
சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி? / How to Get Land Document Copy Online in Tamil / சொத்து பத்திரம் நகல்:- சொத்து உரிமையாளர்கள், சொத்து பத்திரத்தை பழுதுபடாத விதத்தில் மிகவும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் வைத்திருப்பார்கள். இருப்பினும் சில சமயங்களில் அந்த பத்திரம் தொலைந்து போகும் சம்பவங்களையும் நாம் பார்த்திருப்போம். என்ன தான் நாம் அந்த சொத்திற்கு உரிமையாளர் என்றாலும்கூட ஏதாவது வீட்டு சூழ்நிலைக்கு பணம் தேவைப்படும் போது, நமது அந்த சொத்து பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறலாம் என்று நினைப்போம். அந்த சமயத்தில் நம்மிடம் சொத்து பத்திரம் இல்லையென்றால் வங்கி அதிகாரி பணம் வழங்க மாட்டார்கள். சொத்தின் உரிமையாளர் மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முன்பெல்லாம் தொலைந்து போன அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்கள் சமர்ப்பித்து அலைந்து திரிந்துதான் சொத்து பத்திர நகல் பெறுவோம். இருப்பினும் இப்பொழுது அவ்வாறு எல்லாம் சொத்தின் உரிமையாளர்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை சொத்தின் உரிமையாளர் முயற்சி செய்தால் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தொலைந்து போன சொத்து பாத்திரத்தின் நகல் பெறமுடியும்.
சரி வாங்க ஆன்லைன் மூலம் சொத்து பத்திர நகல் பெறுவது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி? |
சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி? How to Get Duplicate Land Documents in Tamil..!
ஆன்லைனில் சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி?ஸ்டேப்: 1
முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள். இப்பொழுது இணையதளத்தின் முகப்பு பகுதி OPEN ஆகும். தாங்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தில் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வர்ட் கொடுத்து லாகின் செய்திருந்தால். அவற்றை உள்நுழைவு என்ற இடத்தில் தங்களுடைய பெயர், கடவுச்சொல் மற்றும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள கேப்சா கோடினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
தாங்கள் இதுவரை இந்த இணையதளத்தில் லாகின் செய்தது இல்லை என்றால் பயனர் பதிவு என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
பின் அவற்றில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து தங்களுடைய கணக்கை உருவாக்க வேண்டும்.
பிறகு தங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் அனுப்பப்படும் அந்த OTP – எண்களை உள்ளிட்டால் தங்களுடைய கணக்கு ஓபன் ஆகிவிடும்.
பிறகு முகப்பு பக்கத்திற்கு வந்து தங்களுடைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்ட் ஆகியவற்றை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இணையதளத்தின் முகப்பு பகுதி Refresh செய்யப்படும்.
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..? |
பத்திரம் நகல் எடுப்பது எப்படி ஸ்டேப்: 2
பிறகு மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், அவற்றில் சிலவகையான ஆப்ஷன்கள் காட்டப்படும் அவற்றில் சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்தால், இப்பொழுது புதிதாக ஒரு பேஜ் திறக்கப்படும்.
How to Get Land Document Copy Online in Tamil step: 3
அந்த பேஜில் ஆவணங்களின் விவரங்களை உள்ளிட்ட வேண்டும். அதாவது ஆவணத்தின் வகைப்பாடு என்ற இடத்தில, சொத்து சம்மந்தப்பட்ட ஆவணம் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஆவண எண் என்பதில் தங்களுடைய வில்லங்க சான்றிதழிலில் உள்ள ஆவண எண்ணினை உள்ளிட்ட வேண்டும்.
பின் சார்பதிவாளர் அலுவலகம் என்ற இடத்தில், தாங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்திர்களோ அந்த அலுவலகத்தினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஆண்டு என்ற இடத்தில் தாங்கள் எந்த ஆண்டு பத்திரம் பதிவு செய்திர்களோ அந்த ஆண்டினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு அவற்றில் காட்டப்பட்டுள்ள கேப்சா கோடினை அவற்றில் உள்ளது போல் டைப் செய்து தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
தேடுக என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தின் கீழ் பகுதில் தாங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்.
சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி ஸ்டேப்: 4
பிறகு இணையவழி விண்ணப்பிக்க என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள். பிறகு மற்றொரு பேஜ் ஓபன் ஆகும். அதாவது தனிப்பட்ட விவரங்கள் என்ற பேஜ் திறக்க படும் அவற்றில் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
அதாவது பத்திரம் யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுடைய பெயர் மற்றும் அவருடைய தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு சேமிக்க மற்றும் அடுத்த பக்கம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் சரியாக உள்ளது என்றால் சரி என்ற பொத்தானை கிளிக் செய்து உள்நுழையுங்கள்.
ஸ்டேப்: 5
இப்பொழுது கட்டணம் விவரங்கள் என்ற பேஜ் ஓபன் ஆகும் அவற்றில் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் தாங்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய கட்டணத்தை செலுத்த வேண்டியதாக இருக்கும்.
எனவே செலுத்துக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யங்கள் அவற்றில் சில விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும் அவற்றை சரியாக உள்ளிட்டு தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை முடித்தபிறகு Acknowledge Receipt தங்களுக்கு கிடைக்கும் அதில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அதன் பிறகு ஒரு டவுன்லோட் ஆப்சன் தோன்றும் அதில் இருக்கும் சிவப்பு கலர் எழுத்தை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு PDF file டவுன்லோட் ஆகும் அதைப் படித்து பார்த்து விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி ஸ்டேப்: 6
பிறகு இணையதளத்தின் முகப்பு பகுதிக்கு சென்று மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், பிறகு சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், பிறகு கோரிக்கைப் பட்டியல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது இந்த பகுதியின் கீழ் தங்களுடைய விவரங்களை காணலாம் அதாவது தங்களுடைய விண்ணப்பத்தின் எண், தங்களுடைய பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, நிகழ்நிலை ஆவணம் மற்றும் கையொப்பமிட்ட ஆவணம் போன்ற விவரங்கள் இருக்கும்.
தாங்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி இருந்தால் தாங்கள் விண்ணப்பித்த 1 அல்லது 2 நாட்களுக்குள் தங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
எனவே இரண்டு நாள் கழித்து இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை செக் பண்ணுங்கள் அதாவது முகப்பு பகுதியில் மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், பிறகு சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், பிறகு கோரிக்கைப் பட்டியல் என்ற ஆப்ஷனை கிளிக் அந்த பக்கத்தின் கீழ் பகுதில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோட் ஆப்சன் இருக்கும். டவுன்லோட் ஆப்ஷன் வந்திருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த மாதிரி உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை சுலபமாக ஆன்லைனில் விண்ணப்பித்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி வணக்கம்…🙏🙏🙏
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |