மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு எங்கு தொடங்குவது?

Mutual Funds Investment

பரஸ்பர நிதி முதலீடு | Mutual Funds Investment

ஹலோ நண்பர்களே. இன்று நம் பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அது என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீர்கள். இன்று நாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி, கணக்கு எங்கு தொடங்குவது என்ற தகவல்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக, பங்குசந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறுபவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பங்கு சந்தைகளை பற்றி தெரியாதவர்களுக்கு அதில் முதலீடு செய்வது எப்படி லாபம் பெறுவது எப்படி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று நம் பதிவில் இதை பற்றி தெரிந்துகொள்வோம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வது எப்படி: 

பொதுவாக ஒரு பங்குசந்தையில் நீண்டகால முதலீடு என்பது பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏதேனும் ஒரு வங்கியில் வங்கிக் கணக்கு மற்றும் KYC (know your customer)/ CKYC (Central Know Your Customer) இருக்கவேண்டும். பொதுவாக, வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு தாய் நிறுவனம் என்று  ஓன்று உள்ளது. அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வங்கிகள் ஒரே பெருநிறுவன குழுமத்தை (Corporate group) சேர்ந்தது.

இருப்பினும், மியூச்சுவல் ஃபண்ட்களை SEBI அமைப்பும், வங்கிகளை RBI அமைப்பும் ஒழுங்குபடுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் இதனை மியூச்சுவல் ஃபண்ட் பங்குதாரர்களே மியூச்சுவல் ஃபண்ட் தரகர்களாகவும் செயல்படுகின்றனர். மேலும், இதுபோன்று இல்லாவிட்டால் Online-ல் செய்துகொள்ளலாம். பல முக்கிய நகரங்களில் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன அலுவலகங்கள் தொடங்கியுள்ளனர்.

முதலீடு செய்யத் தொடங்குவதற்கு பல வலிகள் உள்ளன. முதலில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ஒரு காசோலை அல்லது வங்கி டிராஃப்டை இணைத்து கிளை அலுவலகத்தில் கொடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால் தனிப்பட்ட முதலீட்டாளர், பதிவாளர் அல்லது பரிமாற்ற ஏஜெண்டிடம் சமர்ப்பிப்பதன் மூலம் ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யமுடியும். மேலும், நிதி இடைத்தரகர் அவரின் உதவியுடன் ஒருவர் முதலீடு செய்யமுடியும். இன்றைய காலகட்டத்தில் முதலீட்டை உறுதிசெய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இருப்பதால் ஆன்லைனில் முதலீடு செய்யலாம்.

மேலும், நீங்களே ஆன்லைனில் Zerodha app, Groww app, Angelone, Upstock போன்ற இணையதளங்களின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யமுடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய என்ன தேவை?

  • பான் கார்டு.
  • ஆதார் கார்டு.
  • காசோலை (leaflet) அதில் முதலீடு செய்பவர் பெயர் அவசியம் இருக்கவேண்டும்.
  • வங்கி கணக்கை Online-ல் செயல்படுத்த தெரிந்திருக்கவேண்டும்.
  • நிரந்தர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்

மொத்தம் எத்தனை வகை ஃபண்ட்கள் உள்ளன:

  • Open ended / Close ended.
  • Balance Fund – இருப்பு நிதி.
  • Hybrid Fund – கலப்பின நிதி.
  • Large Cap – பெரிய திறன்.
  • Mid Cap – நடுத்தர திறன்.
  • Small Cap – சிறிய திறன்.
  • Sectoral Fund – துறைசார் நிதி.
  • Dept Fund – திரவ நிதி.
  • Arbitrage Fund – நடுவர் நிதி.
  • Income Fund – வருமான நிதி.
  • Gilt Fund – கில்ட் நிதி.
  • Short Term Fund – குறுகிய கால நிதி.
  • Ultra Short Term Fund – தீவிர குறுகிய கால நிதி.

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்:

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யலாம். அதவாது 18 வயத்துக்குட்பட்டவர்கள் என்றால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் பெயரில் முதலீட்டை தொடங்கலாம். 100 ருபாய் முதல் முதலீடு செய்யலாம். சிறுவர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணியைக் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யமுடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் நன்மைகள்: 

  • நீண்டகால முதலீட்டில் இருப்பவர்கள் அன்றாட பங்குசந்தை ஏற்றம் இறக்கம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. பங்குசந்தையில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் Fund Type அடிப்படியில் மாறுபட்ட வருமானம் கிடைக்கும்.
  • முதலீடு குறைவதற்கு அதிகவாய்ப்பு உண்டு.
  • மியூச்சுவல் ஃபண்ட்ஸில் பண வீக்கத்தை மேலும் அதிகரித்து வருமானம் தரக்கூடியது.
  • மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு வருமானம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
  • மியூச்சுவல் ஃபண்ட்ஸில் LTCG ஒரு வருடத்திற்கு மேல் முதலீட்டை தொடரும் பட்சத்தில் நமக்கு கிடைக்கும் வருமானத்தில் இருந்து வரி கட்ட வேண்டும்.
முதலீடுகளுக்கான சிறந்த ஐந்து இன்டெக்ஸ் ஃபண்ட்கள்

மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்யமுடியும்:

  • குறைந்த பட்ச மொத்த முதலீடு 1,000.
  • SIP வகையில் முதலீடு 100 முதல் ஆரம்பிக்கலாம்.
  • குறைந்த பட்ச கூடுதல் முதலீடு 1,000 மட்டுமே.
  • மியூச்சுவல் ஃபண்டின் மூலம் முதலீடு செய்யும் பொழுது 1% லிருந்து 2% வரை செலவு விகிதம் (Expanse ratio) கிடைக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil