ஆன்லைன் மூலம் EB எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

Advertisement

ஆன்லைன் மூலம்மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? | How to Link Aadhaar With EB Number Online Tamil

How to Link Aadhar With EB Number Online Tamil – வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாட்டில் மின்சாரம் முறைகேட்டை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அது என்ன அறிவிப்பு என்றால் நமது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அவசியம் இணைந்திருக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு தான் அது. இந்த அறிவிப்பு எதற்கு அறிவித்துள்ளனர் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களுக்கான இலவச மற்றும் மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆக நாம் இதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் அதுகுறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

How to Link Aadhar With EB Number Online Tamil

ஸ்டேப்: 1

முதலில் https://www.tangedco.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டேப்: 2

பிறகு இணையதளத்தின் முகப்பு பகுதி ஓபன் ஆகும் அவற்றில் Link your service connection number with aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 3

அவற்றை கிளிக் செய்த பிறகு மற்றொரு பேஜ் திறக்கப்படும். அவற்றில் Information to consumers என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கவனமாக படித்துக்கொள்ளுங்கள். ஏன் அதை படிக்க வேண்டும் என்றால் சிலர் மட்டும் தான் EB எண்ணுடன் ஆதார் எண்ணைலிங்க் செய்ய முடியும். அதாவது Domestic, Powerloom, Agriculture and Hut services ஆகியோர் மட்டும் தான் லிங்க் செய்ய முடியும். இவற்றில் Domestic கேர்ணல் அனைத்து குடியிருப்புகளல் உள்ளவர்களும் Eb எண்ணுடன் ஆதார் எண்ணை Link செய்துகொள்ளலாம்.

மேலும் இவர்கள் ஆதார் அட்டை jpg/jpeg வடிவத்தில் 300KB அளவில் Uploaded செய்ய வேண்டியதாக இருக்கும்.

அதேபோல் உங்கள் Service Connection Number சரியாக உள்ளிட்ட வேண்டும். Service Number என்ன என்று தெரியவில்லை என்றால் (please click here to view these formats) என்பதை கிளிக் செய்திர்கள் என்றாலே உதாரணத்திற்கு அவற்றில் கட்டப்பட்டிருக்கும். அதாவது அது EB Number ஆகும்.

ஸ்டேப்: 4

பிறகு SERVICE DETAILS என்பதில் Service Connection Number என்ற இடத்தில உங்கள் EB Number-ஐ டைப் செய்யுங்கள், பிறகு Enter என்பதை கிளிக் செய்தால் உங்கள் EB Bill-யில் எந்த மொபைல் எண்ணை ரிஜிஸ்ட்டர் (Register) செய்து வைத்திருந்தீர்களோ அந்த எண்ணிற்கு ஒரு OTP வரும்.

அந்த OTP எண்ணை Enter OTP என்பதில் உள்ளிட்டு மீண்டும் Enter செய்யுங்கள்.

ஸ்டேப்: 5

இப்பொழுது மற்றொரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் Service Connection Number, Name of the consumer, Supply Address, Occupant Details, Aadhar Number, Name as Aadhar, Upload Aadhar ID போன்ற விவரங்கள் இருக்கும்.

Service Connection Number, Name of the consumer, Supply Address ஆகியவை செப்ரெட்டாக அதுவே தானாக வந்துவிடும்.

அதன் பிறகு Occupant Details-யில் நீங்கள் Ow jpg/jpeg வடிவத்தில் 300KB அளவில் ner என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள், அல்லது வடக்கை இருக்கிறீர்கள் என்றால் Tenant என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

பிறகு Aadhar Number-ஐ சரியாக உள்ளிட்ட வேண்டும். அதேபோல் ஆதார் அட்டையில் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அதேபோல் உங்கள் பெயரையும் Name as Aadharஎன்பதில் உள்ளிடவும்.

பின்பு Upload Aadhar ID என்பதில் Browse என்பதை கிளிக் செய்து உங்கள் jpg/jpeg வடிவத்தில் 300KB அளவில் உள்ள ஆதார் அட்டையை Upload செய்து Submit என்பதை கிளி செய்தீர்கள் என்றால் உங்கள் EB எண்ணுடன் ஆதார் எண் Link ஆகிவிடும்.

Link செய்வதற்க்கான அதிகாரப்பூர்வ இணையத்தலம் 👇
https://adhar.tnebltd.org/

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement