இலக்கணக் குறிப்பு | Ilakkana Kurippu

Ilakkana Kurippu

இலக்கணக்குறிப்பு | Ilakkana Kurippu

நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் நமது பள்ளி பருவத்தில் தமிழ் பாடப்பிரிவில் இலக்கணக் குறிப்பு பற்றி படித்திருப்போம். இலக்கணக் குறிப்பு என்பது ஒரு சொல்லிற்கான சரியான இலக்கண வகையை கூர்வது ஆகும். உதாரணத்திற்கு இந்த  பதிவில் சில தமிழ் சொற்களுக்கு சரியான இலக்கண வகை என்ன என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம். ஆகவே கல்வி கற்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவர்க்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Ilakkana Kurippu:-

இலக்கணக்குறிப்பு
சொற்கள்  வகை
தீராத வறுமை எதிர்மறைப் பெயரெச்சம்
பேரறிவு பண்புத்தொகை
பேரோடும் புகழோடும் எண்ணும்மை
விக்கிவிக்கி அடுக்குத்தொடர்
நீரூற்று ஆறாம் வேற்றுமைத்தொகை
நீதிநூல் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
சட்டதிட்டம் உம்மைத்தொகை
தலை குனிந்து இரண்டாம் வேற்றுமைத்தொகை
கன்றுகுரல் ஆறாம் வேற்றுமைத்தொகை
சிந்தித்தேன் தன்மை ஒருமை வினைமுற்று
பதினெண் மேற்கணக்கு நூல்கள்

இலக்கணக் குறிப்பு:-

இலக்கணக்குறிப்பு
சொற்கள்  வகை
கங்கையும் சிந்துவும், விண்ணிலும் மண்ணிலும் எண்ணும்மைகள்
மாவலி உரிச்சொற்றொடர்
தெற்கு வடக்காய் முரண்தொடை
தொடுவானம் வினைத்தொகை
மலர்ச்சோலை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
விரல்கள் பத்தும் தோள்கள் இரண்டும் முற்றும்மைகள்
வெறுங்கை, கருங்கல் பண்புத்தொகைகள்
பாடுகிறாய் முன்னிலை ஒருமை வினைமுற்று
கண்ணர் வெள்ளம், பசிக்கயிறு, பம்பரம், மெல்லிய காம்பு, சிறுவிரல், தீக்குச்சிகள் உருவகங்கள்
புல்நுனி ஆறாம் வேற்றுமைத்தொகை

இலக்கணக்குறிப்பு:-

இலக்கணக்குறிப்பு
சொற்கள்  வகை
சொற்பதம் (சொல்பதம்) ஒருபொருட்பன்மொழி
சொற்பதம் (சொல்லினதுவழி) ஆறாம் வேற்றுமைத்தொகை
பூவம் (பூர்வம்) இடைக்குறை
பதத்துணை (பதத்தின் துணை) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
இரட்ட, நிழற்ற, கவிப்ப, தெருள ‘செய’ வென் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள்
புடைபுடை அடுக்குத்தொடர்
உயர்ந்தோய், செறுத்தோய் முன்னிலை வினைமுற்றுகள்
ஆனாத செல்வம், உணர்ந்த முதல்வன் பெயரெச்சம்
என்கோ தன்மை ஒருமை வினைமுற்று
கண்ணுதல் (நுதல்கண்) முன்பின்னாய்த் தொக்கது இலக்கணப் போலி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

Ilakkana Kurippu:-

இலக்கணக்குறிப்பு
சொற்கள்  வகை
பொங்குதாமரை வினைத்தொகை
கன்னிபாலன் நான்காம் வேற்றுமைத்தொகை
தற்சூழ இரண்டாம் வேற்றுமைத்தொகை
மெய்ப்பொருள், சுவர்க்கபதி இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
பழ ஆவணம், தீநெறி, கடும்பகை, முக்குடை பண்புத்தொகைகள்
படூஉம் இசைநிறையளபெடை
ஆற்றீர் முன்னிலைப் பன்மை எதிர்மறை வினைமுற்று
ஓம்புமின் ஏவல் பன்மை வினைமுற்று
இரங்குவிர் முன்னிலைப் பன்மை வினைமுற்று
கணிச்சிக் கூர்ம்படை இருபெயரொட்டுப் பண்புத்தொகை

இலக்கணக் குறிப்பு:-

இலக்கணக்குறிப்பு
சொற்கள்  வகை
கடுந்திறல், நல்லாறு, கூர்ம்படை பண்புத்தொகைகள்
திரைகவுள் வினைத்தொகை
கயன்முள் அன்ன உவம உருபு
சான்றீர் விளி
யாரையும் நம்பி முற்றும்மை
இல்லாதவர் எதிர்மறை வினையாலணையும் பெயர்
வந்தவர், போனவர் முரண்தொடை
அடி வாழ்த்துவம் (அடியை வாழ்த்துவம்) இரண்டாம் வேற்றுமைத் தொகை
வாழ்த்துவம் தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று
உலகம் இடவாகுபெயர்

இலக்கணக்குறிப்பு:-

இலக்கணக்குறிப்பு
சொற்கள்  வகை
வாழிய வியங்கோள் வினைமுற்று
திருந்துமொழி, பொருந்துமொழி வினைத்தொகைகள்
அசைத்த மொழி, இசைத்த மொழி பெயரெச்சங்கள்
இளமைப்பருவம், தமிழன்னை இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள்
நண்ணும் பருவம் ‘செய்யும்’ என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
வாழ்க்கை கூறல் தொழிற்பெயர்கள்
ஒன்றே ‘ஏ’காரம் தேற்றேகாரம்

 

பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil