வங்கியில் செல்லான் விண்ணப்பிப்பது எப்படி..? | Indian Bank Withdrawal Form Fill Up Seyvathu in Tamil

Advertisement

இந்தியன் வங்கியில் பணம் எடுக்கும் படிவம் | Indian Bank Challan Form in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று முக்கியமான பதிவை பார்க்க போகிறோம். பொதுவாக அதிகமாக வங்கிகளுக்கு எப்போது செல்வோம் பணம் எடுக்க செல்வோம், இல்லையேற்றால் பணம் போடுவதற்கு செல்வோம். இப்போது அதற்கும் அதிகமாக செல்வதில்லை அனைத்துவிதமான விஷயத்திற்கும் போன் மூலம் செய்து விடுவோம். ஆனால் எப்பொழுதாவது வங்கிக்கு செல்லும் பொழுது செல்லான் என்ற படிவத்தை பார்த்தால் எழுதுவதற்கு கொஞ்சம் தடுமாறுவோம் சில விஷயங்களை மறந்திருப்போம். அப்படி மறந்து விட்டால் இனி கவலையை விடுங்கள் உங்களுக்காக பொதுநலம்.காம் இந்த பதிவை வெளியிட்டு உள்ளது. அதனை பின்பு தெளிவாக காண்போம்.

சாதி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

வங்கியில் செல்லான் விண்ணப்பிக்கும் முறை:

bank challan in tamil

ஸ்டேப்:- 1

  • பொதுவாக அனைத்து வங்கியிலும் ஆங்கில முறையில் தான் செல்லான் இருக்கும் இந்தியன் வங்கியில் மட்டும் தான் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் என இரண்டு மொழிகளிலும் இருக்கும். இப்போதும் உங்களுக்கு வங்கியில் பணம் எடுப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
  • முதலில் DATE என்ற இடத்தில் நீங்கள் பணம் எடுக்கும் அன்று என்ன தேதியோ அதனை போட்டுக்கொள்ளவும்.

ஸ்டேப்:- 2

  • பின்பு Pay Of Self/ Us The Sum Of என்பதில் நீங்கள் எடுக்கும் பணத்தில் பெயரை எழுத்தால் எழுத வேண்டும்.
  • எழுத்தால் எழுதியது போல் இந்த கட்டத்தில் எண்களால் எழுத வேண்டும்.

(எடுத்துக்காட்டாக):

  • 5,000 பணம் எடுக்க சென்றால் அதனை ஐந்தாயிரம் மட்டும் என்பதை எழுதவும் அல்லது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் Five Thousand Rupees Only என்பதை எழுதவும்.

ஸ்டேப்:- 3

வங்கியில் செல்லான் விண்ணப்பிப்பது எப்படி

  • 16 கட்டத்தில் உங்களுடைய இந்தியன் வங்கி கணக்கு எண்களை தெளிவாக நிதானமாக எழுதிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்:- 4

 

வங்கியில் செல்லான் விண்ணப்பிக்கும் முறை

  • Sig. Of. A/C Holder என்ற இடத்தில் யாருடைய பெயரில் வங்கியில் கணக்கு உள்ளதோ அவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
  • கையொப்பம் வங்கியில் எப்படி கையொப்பம் இட்டுருந்தார்களோ அதனை போலவே கையேழுத்து இடவேண்டும்.
  • அப்படி சரியாக கையெழுத்து இல்லையேற்றல் உங்களுடைய படிவத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஸ்டேப்:- 5

Indian Bank Challan Form in Tamil

 

  • மேல் உள்ள படத்தில் கையொப்பம் கேட்டிருப்பார்கள். மேலே கொடுக்கப்பட்ட படத்தில் யாருடைய வங்கிக் கணக்கு என்பதை அவர்களுடைய பெயரை எழுதவேண்டும்.

ஸ்டேப்:- 6

Indian Bank Withdrawal Form Fill Up Seyvathu in Tamil

 

  • பின்பு கீழ கொடுக்கப்பட்ட எதையும் நீங்கள் விண்ணப்பிக்கவேண்டாம். கடைசியாக Signature Of Paying Official என்ற இடத்தில் உங்களுடைய கையொப்பத்தை போடவும்.
வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

 

ஸ்டேப்:- 7

இந்தியன் வங்கியில் பணம் எடுக்கும் படிவம்

  • பின்பு செல்லானின் பின் புறத்தில் மேலே கொடுக்கப்பட்ட படத்தில் இருக்கும் இடத்தில் உங்களுடைய கையொப்பத்தை போட்டுக்கொள்ளவும்.
  • அதில் உள்ள கட்டங்களில் வங்கியாளர்கள் உங்களுக்கு விண்ணப்பித்து தருவார்கள் நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை மட்டும் போட்டுக்கொள்ளவும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement