இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதை பற்றி பார்க்கலாம். ஏற்றுமதி என்பது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளை மற்றொரு நாட்டிற்கு அனுப்புவது. அதாவது வெளிநாட்டிற்கு பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள் ஏற்றுமதியாளர்களாக கருதப்படுகிறார். உலக சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். ஏற்றுமதி பொருட்களை நாம் கடல் (கப்பல்) வழியாகவோ அல்லது வான் (விமானம்) வழியாகவோ அனுப்பி கொண்டு இருக்கிறோம். அப்படி இந்தியாவில் என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பதை கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க.
பெட்ரோலிய பொருட்கள் – ஏற்றுமதி இறக்குமதி:
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெட்ரோலியம் முக்கியமானது. இந்தியாவில் இருந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.
இரும்பு மற்றும் ஸ்டீல்:
இரும்பு மற்றும் ஸ்டீல் போன்ற பொருட்களை இந்தியா சுதந்திரத்திற்கு முன் இறக்குமதி செய்து வந்தது. தற்பொழுது ஏற்றுமதி செய்வதில் இந்தியா 9 பில்லியன் டாலர் அளவுக்கு சாதனை படைத்துள்ளது.
தங்க நகைகள்:
உலக தங்க சந்தையில் உற்பத்தி செய்யப்படும் தங்கங்களில் இந்தியா 20% பயன்படுத்தி வருகிறது. அதில் 75 சதவிகிதத்தை நகையாக பயன்படுத்துகிறார்கள். இவற்றில் 30% தயாரிக்கப்படும் தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இயந்திரங்கள்:
அனைவரும் எளிதாக பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் இயந்திரங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு 10.5 சதவீத வளர்ச்சியுடன் 13.6 பில்லியன் டாலர் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் – இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள்:
உலகின் உள்ள பல முக்கிய நாடுகளுக்கு தேவைப்படும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வாகனங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது. 2016-2017 நிதி ஆண்டில் இவற்றின் மதிப்பு 145 பில்லியன் டாலர்கள் ஆகும்.
பையோ கெமிக்கல்ஸ்:
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பையோ கெமிக்கல்ஸ் மதிப்பு 12 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மருந்து துறை:
சன் பார்மா, லூபின், ரான்பாக்ஸி போன்ற சிறப்பான மருந்து நிறுவனங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கின்றன. இந்தத்துறையின் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் 11.7 பில்லியன் டாலர்களாகும்.
தானியங்கள்:
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் பெற்றுள்ளது. 2016-2017-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டு பெறப்பட்ட தானியங்களின் மதிப்பு 10.1 பில்லியன் டாலர்களாகும்.
ஆடைகள் – ஏற்றுமதி:
இந்தியாவில் 63% ஜவுளி சந்தை உள்ளது. ஆடைகள் தயாரிப்பில் குறிப்பாக ஜூட் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ்:
9 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி தொழிலுக்கான DOCUMENTS என்ன தேவை? |
ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி? |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |