Ivy Gourd in Tamil
நாம் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்களின் ருசி எப்படி இருக்கும்னு தான் தெரியும். இதை எப்படி விளைகிறது, இதற்கு பெயரை எப்படி வந்தது என்ற விவரமெல்லாம் அறிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் கோவைக்காய் வேலி ஓரம் மற்றும் காடு மற்றும் வயல்களில் விளைய கூடியது. இதை தனியாகவும் பயிரிடுகிறார்கள். ஆனால் இது தானகவே விளைந்து இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். சில நபர்கள் இதை பழமாக வந்ததும் சாப்பிடுவார்கள். ஆனால் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். அதனால் இந்த பதிவில் கோவைக்காயை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Ivy Gourd in Tamil:
கோவைக்காய் என்பதை கொக்கினியா கிராண்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை கொடி வகையை சார்ந்தது. இந்தியா, தாய்லாந்து மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
கோவைக்காய் பிறப்பிடம்:
கோவைக்காய் தெற்காசியாவை பிறப்பிடமாக கொண்டுள்ளது. இந்தியா, தாய்லாந்து மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
வேறு பெயர்கள்:
கோவைக்காயை இந்தியில் குண்ட்ரு என்றும், குஜராத்தியில் டின்டோரா என்றும், மராத்தியில் டோண்ட்லி என்றும் அழைக்கப்படுகிறது.
சாகுபடி:
வேலிகள், தோட்டங்கள், காடுகளில், இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. இவை 5 மீட்டர் வரைக்கும் வளர கூடியது.
கோவைக்காய் செடியை நடவு செய்த 60 முதல் 70 நாட்களுக்குள் அறுவடை செய்து கொள்ளலாம்.
கோவைக்காய் மருத்துவ குணங்கள்..!
சத்துக்கள்:
கோவைக்காயில் தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துருக்கிறது. வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்:
கோவைக்காயில் நார்ச்சத்து குறைவாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் கலவை கோவைக்காயில் உள்ளது. அதனால் சர்க்கரையின் அளவை குறைக்க நினைப்பவர்கள் கோவைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா, மூட்டு வலி, இதய பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் சரும பாதுகாப்பிற்கு கோவைக்காய் உதவுகிறது.
எப்படி சமைக்கலாம்:
கோவைக்காய் பழமாக வந்தவுடன் சாப்பிடலாம். அப்படி இல்லையென்றால் வறுவல், பொரியல் செய்து சாப்பிடலாம்.
பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |