ஜமாபந்தி மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Advertisement

ஜமாபந்தி மனு எழுதுவது எப்படி? | Jamabandi Petition Online in Tamil

இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஜமாபந்தி மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஜமாபந்தி என்பது ஆண்டு தோறும் வருவாய் துறையினால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இதில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் போன்றவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த தொகுப்பில் ஜமாபந்தி மனு எதற்கு உபயோகப்படுகிறது என்பதையும் மற்றும் எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

ஜமாபந்தியில் எதற்காக மனு அளிக்கலாம்? | Jamabandi Meaning in Tamil:

  • இந்த ஜமாபந்தி மூலம் பட்டா, சிட்டா குறித்த விவரங்கள் கேட்டு மனு கொடுக்கலாம்.
  • குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
  • இலவச மனை பட்டா, குடும்ப அட்டை, ஆதரவற்ற மற்றும் முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுக்கலாம்.
  • இடம் (வீட்டு மனை) உள்ளவர்கள் அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.

Jamabandi Petition Online in Tamil:

jamabanthi online 2022 tamil

  • https://gdp.tn.gov.in/jamabandhi/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் உங்களது தொலைபேசி எண் உள்ளிடவும். அதற்கு கீழே Captcha Code இருக்கும் அதை உள்ளீட்டு உள்நுழைவு என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply Jamabandhi Pettition Online in Tamil Language:

jamabanthi online 2022 tamil

  • படத்தில் உள்ளவாறு ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் மனு பெற்ற வழி என்ற ஆப்ஷன் இருக்கும், அதில் ஜமாபந்தி மட்டுமே இருக்கும் அந்த ஆப்ஷனை மாற்ற முடியாது. மனு வகை என்பதில் இரண்டு Option கொடுக்கப்பட்டிருக்கும். அதில் புதிய மனு பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் அதை தேர்வு செய்யவும்.
  • நீங்கள் ஏற்கனவே சென்ற ஆண்டு ஜமாபந்தியில் மனு அளித்து உள்ளீர்கள் அதற்கான பதில் வரவில்லை என்றால் மீண்டும் சமர்பிக்கப்படும் மனு என்பதை தேர்வு செய்யவும்.
  • துறை என்பதில் எந்த துறைக்கு மனு கொடுக்கப்போகிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மனுப் பரிசீலனை அலுவலக நிலை என்பதில் அதுவே Collector/ Taluk Office என்பதை தேர்வு செய்துவிடும். நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

How to Apply Jamabandi Online Tamilnadu:

jamabandi petition online tamilnadu

  • மனு முதன்மை பிரிவு என்பதில், உங்கள் மனு எந்த உட்பிரிவுக்கு கீழ் வருகிறதோ அதில் ஒன்றை தேர்வு செய்யவும். மனு துணை பிரிவு என்பதில் மனு முதன்மை பிரிவுக்கு உட்பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதாவது மனுவின் பொருளை இங்கு தேர்வு செய்யவும்.

ஜமாபந்தி மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

jamabandi petition online tamilnadu

  • பின் மாவட்டம், வட்டம், வருவாய் கிராமம் போன்றவற்றை உள்ளிடவும்.

Jamabandi Petition Online in Tamil:

jamabandi petition online in tamil

  • மனு விவரம் என்பதில் உங்கள் கோரிக்கையை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் உள்ளிடவும். பிறகு நகல்/ துணை ஆவணங்கள் பதிவேற்றம் (கட்டாயம் இல்லை) என்ற தேர்வு வரும். அதில் மனுவை எழுதி (காகிதம்) அல்லது டைப் செய்து உள்ளிடவும். JPEG அல்லது PDF வடிவில் தான் பதிவு செய்ய முடியும்.

ஜமாபந்தி மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

jamabandi petition online in tamil

  • மனுதாரர் விவரங்கள் & தொடர்பு முகவரி என்ற பகுதி வரும். அதில் உங்களது தொலைபேசி எண், பெயர், தந்தை/ கணவர் பெயர், பாலினம், சமூகம், சிறப்பு பிரிவு, முகவரி, தெரு, பகுதி/ வார்டு/ ஊர் (ஏதேனும் ஒன்று), மாவட்டம், வட்டம், வருவாய் கிராமம் என்பதில் உங்களது விவரங்களை சரியாக உள்ளிடவும். விவரங்களை உள்ளிட்ட பின் கீழே உள்ள சேமி என்பதை கிளிக் செய்யவும்.

Jamabandi Petition Online in Tamil:

Jamabandi Petition Online in Tamil

  • இப்பொழுது மனு பதிவாகிவிட்டது. பின்னர் உங்களுக்கான Acknowledgement வந்திருக்கும். அதில் நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இருக்கும். மேலும் அதில் மனு எண் மற்றும் மனு தேதி இருக்கும். இதை நீங்கள் டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

How to Check Jamabandi Status Online in Tamil:

Jamabandi Petition Online in Tamil

  • மனுவின் Status பார்க்க https://gdp.tn.gov.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். பின் அதில் Pettition Status என்பதில் உங்களுடைய மனு எண் உள்ளிடவும். அதற்கு கீழே Captcha Code இருக்கும். அதை உள்ளீட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது மனுவின் நிலை வரும், எத்தனை நாட்களாக மனு நிலுவையில் உள்ளது, எந்த எந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை பார்த்து கொள்ளலாம்.
முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement