கடையெழு வள்ளல்கள் பெயர்கள்| Kadai Elu Vallalgal

Advertisement

Kadai Elu Vallalgal in Tamil | கடையெழு வள்ளல்கள் பெயர்கள் மற்றும் சிறப்புகள் | கடையெழு வள்ளல்கள் பற்றி எழுதுக

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கடையெழு வள்ளல்கள் பெயர்கள் மற்றும் சிறப்புகள் (Kadai Ezhu Vallalgal Names in Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பள்ளி பருவத்தில் நாம் படித்த போது கடையெழு வள்ளல்கள் பற்றி படித்திருப்போம். அந்த தமிழ் ஏழு வள்ளல்கள் யார், யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் “பாரி” என்று சொல்வார்கள். மீதமுள்ளவர்கள் பெயர்களை கூற தயங்குவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கடையெழு வள்ளல்கள் என்பவர்கள் யார்? யார்? அவர்கள் பெயர் என்ன? கடை ஏழு வள்ளல்கள் சிறப்பு, மற்றும் அவர்கள் பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க…

கடையெழு வள்ளல்கள்:

தமிழின் சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். மேலும் இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.

கொடைமடம் என்றால் என்ன?

கொடைமடம் என்றால் சிறிதளவு கூட யோசித்து பாராமல் பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும். அவ்வாறு கொடுத்த வள்ளல்கள் யார்? அவருடைய பெயர்களை கீழ் காண்போம் வாங்க.

7 கடையெழு வள்ளல்கள் பெயர்கள்:

1. பேகன் 
2. பாரி 
3. காரி 
4. ஆய்
5. அதியமான்
6. நள்ளி
7. ஓரி

கடையெழு வள்ளல்கள் சிறப்புகள்:

பேகன்:

பேகன் என்பவர் பொதினி மலைக்குத் தலைவர். தற்போது இந்த இடம் பழனி மலை என்று அழைக்கப்படுகிறது. மழை வளம் மிக்க அந்த மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று பேகன் நினைத்தார். மயில் குளிரில் இருந்து காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் போர்த்திக் கொள்ளுமா எனச் சிறிதும் யோசித்துப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

பாரி:

பாரி என்பவர் பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். இவரை வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தவர்.

காரி:

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் காரி. திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே “மலாடு” ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பு உடையவன். ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும், ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் அணிந்து ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது வழங்கினான்.காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஆய்:

ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!

அதியமான்:

அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுபவர். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர். இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலிமையுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.

நள்ளி:

அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் அழைத்தனர். நள்ளி, கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது அள்ளி வழங்கினார். மேலும் பின்னர் அவர் வேறு ஒருவரிடம் சென்று கொடை கேட்காத அளவிற்கு கொடை அளித்தார். நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.

ஓரி:

இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர். கொல்லிமலை கலைஞர்களுக்கு தனது நாட்டை பரிசளித்தார்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement