தமிழ் கலைச்சொற்கள் | Kalai Sorkal in Tamil

kalaisorkal in tamil

கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ் | List of Kalai Sorkal in Tamil

Kalai Sorkal: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கலைச்சொற்கள் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். பள்ளி பாடத்திலும் சரி, கல்லூரி பாடத்திலும் சரி நம் தமிழ் புத்தகத்தில் கலைச்சொற்கள் என்று ஒரு பக்கம் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் அதை பற்றி பெரிதாக படித்திருக்க மாட்டோம். ஆனால் இப்பொழுது வரும் பல Upsc, TNPSC போன்ற தேர்வுகளில் அதிகமாக இந்த சொற்கள் பற்றிய கேள்வி தான் அதிகமாக கேட்கப்படுகிறது. பொது தேர்வுகளில் பங்கு பெறும் அனைத்து தேர்வாளர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். கலைச்சொற்கள் பற்றி கீழே விரிவாக படித்தறியலாம் வாங்க.

கலைச்சொற்கள் என்றால் என்ன?

 • கலைச்சொற்கள் என்பது ஒவ்வொரு துறைக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் மற்ற மொழிகளில் உள்ள சொற்களை அந்தந்த துறையில் உள்ளவர்கள் அவர்களின் துறைக்கு ஏதுவாக பயன்படுத்த உருவாக்கப்பட்டதாகும். அதற்கு கலைச்சொல் என்று பெயர்.
 • தமிழில் கலைச்சொல் என்றும் ஆங்கிலத்தில் Glossary என்றும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்
நா பிறழ் சொற்கள்

கலைச்சொற்கள் – Kalai Sorkal Meaning in Tamil:

விஞ்ஞான கலைச்சொற்கள்
Whats Appபுலனம்
You Tubeவலையொளி
Instagramபடவரி
WeChatஅளாவி
Messengerபற்றியம்
Twitterகீச்சகம்
Skypeகாயலை
Telegramதொலைவரி
Bluetoothஊடலை
WiFiஅருகலை

List of Kalai Sorkal in Tamil – தமிழ் கலைச்சொற்கள்:

கலைச்சொற்கள்
Hotspotபகிரலை
Broadbandஆலலை
Onlineஇயங்கலை
Offlineமுடக்கலை
Thumbdriveவிரலி
GPSதடங்காட்டி
CCTVமறைகாணி
OCRஎழுத்துணரி
LEDஒளிர்விமுனை
3D, 2Dமுத்திரட்சி, இருதிரட்சி

கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்:

விஞ்ஞான கலைச்சொற்கள்
Projectorஒளிவீச்சி
Printerஅச்சுப்பொறி
Scannerவருடி
Smart Phoneதிறன்பேசி
SIM Cardசெறிவட்டை
Chargerமின்னூக்கி
Digitalஎண்மின்
Cyberமின்வெளி
Selfieதம் படம் – சுயஉரு – சுயப்பு
Routerதிசைவி

கலைச்சொற்கள் in Tamil:

தமிழ் கலைச்சொற்கள்
Thumbnailசிறுபடம்
Memeபோன்மி
Print Screenதிரைப் பிடிப்பு
Inkjetமைவீச்சு
Laserசீரொளி
Textபனுவல்

கலைச்சொற்களின் வகைகள்:

 1. தொழில்நுட்ப கலைசொற்கள்
 2. புள்ளிவிபரவியல் சொற்கள்
 3. அமைப்பியல் கலைச்சொற்கள்
 4. தாவரவியல் கலைச்சொற்கள்
 5. வேதிப் பொறியியல்
 6. வேளாண்மை
 7. மண்ணியல்
 8. வேதியியல் அருஞ்சொற்கள்
 9. கணிதத்துறைச் சொற்கள்
 10. இயற்பியத்துறைச் சொற்கள்
 11. விலங்கியத் துறைச்சொற்கள்
 12. இயல்களின் தொகுப்பு
 13. அலுவலகப் பயன்பாடுகள்
 14. கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
 15. இணையம் தொடர்புடைய சொற்கள்
 16. பிணையம் தொடர்புடைய சொற்கள்
 17. தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
 18. செல்பேசி தொடர்புடைய சொற்கள்
 19. உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
 20. ஒப்புமையியல் சொற்கள்
 21. பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
 22. மின்னியல் சொற்கள்
 23. நிதியியல் தொடர்புடைய சொற்கள்
 24. புவியியல் தொடர்புடைய சொற்கள்
 25. சட்டம் தொடர்புடைய சொற்கள்
 26. உடலியல் சொற்கள்
 27. மின்திறனியல் சொற்கள்
 28. உளவியல் சொற்கள்

Kalai Sorkal in Tamil:

தொழில்நுட்ப கலைசொற்கள் 
Absolute Coordinatesநேர் ஒருங்கிணைப்புகள்
Absolute Disk Sectorsநேர் வட்டுப் பகுதி
Absolute Link முற்றுத் தொடுப்பு
Abscissaகிடைத்தூரம்
Abacusபரற்கட்டை, மணிச்சட்டம்.
Backமுந்தைய
Back Quoteபின் மேற்கோள்குறி
Back Upகாப்பு
Babbleபிதற்று
Back Planeபின்தளம்

List of Kalai Sorkal in Tamil – தமிழ் கலைச்சொற்கள்:

புள்ளிவிபரவியல் சொற்கள்
Unitஅலகு
Unstableஉறுதியின்றிய,  நிலையில்லா
Variationமாறுபாடு, மாற்றம்
Variableமாறி
Unimodalஒருமுகட்டு
Validஏற்கக்கூடிய
Vital Statisticsபிறப்பு இறப்பு விவரங்கள்
Weighted Arithmetic Meanநிறையிட்ட கூட்டுச் சராசரி
Weighted Average, Weighted Meanநிறையிட்ட சராசரி
Wholesale Price Indexமொத்த விலைக் குறியீட்டெண்

தமிழ் கலைச்சொற்கள்:

அமைப்பியல் கலைச்சொற்கள் 
Zeoliteகனிம வகை
Water Gapஆற்றிடுக்கு
Water Hemisphere நீர் அறைக்கோளம்
Water Holeகுட்டை
Water Spoutsநீர்த்தாரைகள்
Water Tableநிலநீர் மட்டம்
Wave built Platformஅலையாக்கப் பீடம்
Wave cut Benchஅலை அரிப்பினாலான திட்டு
Zonal Soilமண்டல மண்
Zone Of Leachingஉறிஞ்சுமண்டலம்

Science Kalai Sorkal in Tamil:

தாவரவியல் கலைச்சொற்கள்
Carnivorousபுலால் உண்ணுகிற.
Carpelமுசலி மூலம், சூலறை, சூலணு, சூல்வித்திலை
Catalystகடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.
Caudicleமலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
Carbohydrateமாவுப்பொருள், கார்போ ஹைட்ரேட்டுகள்
Carbon Cycleகரிமச்சுழற்சி
Carbon Dioxideகரியமிலவாயு
Cellசெல், உயிரணு
Caruncleமேல்வளர்சதை
Cauline Bundleதண்டுக்கட்டு

Kalai Sorkal in Tamil:

வேதிப் பொறியியல் 
Xenonமந்தமான எடைமிக்க வளித்தனிமம்.
Xeroadiographyஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை.
X-Raysஎக்ஸ் கதிர்கள்
Wormsகோட்டுவிளைவு
Woxen Numberவொக்சன் எண்
Wrapping Testசுற்றற்சோதனை
Wrinklingதிரைதல்
Wrought Ironமெலிந்த இரும்பு, தேனிரும்பு
X-Ray FluroscopyX-ததிர்ப்புளோரொளிர்வுமானம்
X-Ray GaugingX-கதிர்மானம்

வேளாண்மை கலைச்சொற்கள்:

வேளாண்மை
Zoosporeசெடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல்.
Zygomaகன்னத்தின் வளைவெலும்பு.
Zygoteஇரு பாலணு இணைவுப் பொருள்.
Yieldமகசூல், வருவாய், விளைச்சல்
Yogurtகட்டித்தயிர்
Yokeநுகத்தடி, நுகத்தடு, நுகக்கால்
Zoneபகுதி, மண்டலம், வட்டம், சூழல்
Zooflagellateபுற இழை கொண்ட விலங்கு
Zoonplanktonவிலங்குக் குற்றுயிர்கள்
Zoonosesவிலங்கு வழிநோய்கள்

Kalai Sorkal in Tamil – கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்:

மண்ணியல்
Yield Of Wellகிணற்றின் ஊறுதிறன்
Yield Pointநெகிழ் புள்ளி
Yokeநுகம்
Zodiacபால் வீதி
Zonuleசிறுமண்டலம்
Xenomorphicபடிக உருவமற்ற நிலை
Youthful Stage Riverமுதிராநிலை ஆறு
Zenithஉச்சம்
Zenith Angleஉச்சக்கோணம்

Science Kalai Sorkal in Tamil:

வேதியியல் அருஞ்சொற்பொருள்
Silicon Hydrideசிலிக்கான் ரைட்டு
Quinoneகுயினோன்
Saccharinசக்கரின்
Silver Carbonateவெள்ளி காபனேற்று
Steroidதெரோயிட்டு
Tar Oilதார் எண்ணெய்
Tartaric Acidதாத்தாரிக்கமிலம்
Tolueneதொலுயீன்
Triple Bondமுப்பிணைப்பு
Zinc Silicateதுத்தநாக சிலிக்கேட்

தமிழ் கலைச்சொற்கள் – Kalai Sorkal in Tamil:

கணிதத்துறைச் சொற்கள்
Acute Angleகூர்ங்கோணம்
Adjacent Angleஅடுத்துளகோணம்
Bounded Functionஎல்லையுள்ளசார்பு
Closed Intervalமூடியவிடை
Common Factorபொதுச்சினை
Complex Numberசிக்கலெண்
Directrixசெலுத்தி
Discriminantதன்மைகாட்டி
Imaginary Numberகற்பனையெண்
Plane Geometryதளக்கேத்திரகணிதம்

கலைச்சொற்கள் 50:

இணையம் தொடர்புடைய சொற்கள்
E-Communityமின்சமூகம்
Webcastவலைபரப்பு
Net Bankingஇணைய வங்கிச் சேவை
External Cloudபுறநிலை அயன்மை
Internal Cloudஅகநிலை அயன்மை
Web Servicesவலைச் சேவைகள்
Spam Mailகுப்பை மடல்
Webcastவலைபரப்பு
Online Transactionநிகழ்நிலைப் பரிமாற்றம்

கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்:

புவியியல் தொடர்புடைய சொற்கள்
Customs Dutyசுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை
Low Tideகடல் வற்றம்
Trade Windதடக் காற்று
Customs Declarationசுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
Barristerவழக்குரைஞர்
Lithosphereபாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி
Oblate Sphereதட்டைக் கோளம்
Pavement Desertகற்செறி பாலைவெளி
Fjordநுழைகழி

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil