கலப்பு திருமண சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?

How to Apply Inter Caste Marriage Certificate Online in Tamil

கலப்பு திருமண சான்றிதழ் பெறுவது எப்படி? | Inter Caste Marriage Certificate in Tamil

இப்பொழுது நாம் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை அனைத்தும் எளிமையாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வாங்கி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது கலப்பு திருமண சான்றிதழ் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நீங்கள் அரசு உதவித்தொகை பெறுவதற்கும், அரசு நலத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கும், மத்திய மற்றும் மாநில பொதுத்துறை பணியில் சேர்வதற்கும் உங்களுக்கு உதவியாக இருக்கும். சரி வாங்க நாம் இப்போது கலப்பு திருமண சான்றிதழை ஆன்லைன் மூலம் எப்படி வாங்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான ஆவணங்கள்:

 • மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து இருக்கும் Passport Size Photo.
 • திருமண பதிவு சான்றிதழ்
 • மணமகன் மற்றும் மணமகளின் சாதி சான்றிதழ்
 • Address Proof
 • Self Declaration Of Applicant. இவை அனைத்தும் 200 kb-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

கலப்பு திருமண சான்றிதழ் பெறுவது எப்படி?

kalappu thirumana sandrithal peruvadhu eppadi

 • இதில் அப்ளை செய்வதற்கு முதலில் tnesevai.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • பின் அதில் Sign in Option என்பதில் Franchisee Login மற்றும் Citizen Login கொடுக்கப்பட்டிருக்கும், அதில் Citizen Login என்பதை கிளிக் செய்யவும்.

கலப்பு திருமண சான்றிதழ்:

kalappu thirumana sandrithal peruvadhu eppadi

 • ஏற்கனவே லாகின் செய்தவர்கள் அதில் தங்களது User Name, Password மற்றும் Captcha Code கொடுத்து Login செய்யலாம்.

How to Apply Inter Caste Marriage Certificate Online in Tamil:

kalappu thirumana sandrithal peruvadhu eppadi

 • லாகின் இல்லாதவர்கள் Login With Mobile Number என்பதை கிளிக் செய்து Enter Mobile Number என்பதில் உங்கள் தொலைபேசி எண் உள்ளீட்டு generate OTP என்பதை கிளிக் செய்யவும். பின் OTP -ஐ உள்ளீட்டு Verify OTP என்பதை கிளிக் செய்தவுடன் அடுத்த பேஜ் ஓபன் ஆகும்.

கலப்பு திருமண சான்று:

kalappu thirumana sandrithal peruvadhu eppadi

 • பின்னர் Department Wise என்ற ஆப்ஷனில் Revenue Department என்பதை தேர்வு செய்யவும். அதன் பிறகு 2nd page-ல் Inter-caste Marriage Certificate ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

கலப்பு திருமண சான்றிதழ் பெறுவது எப்படி?

inter caste marriage certificate in tamil

 • பின்னர் அதில் உள்ள தகவல்களை படித்து விட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும். இதை நிரப்புவதற்கு மணமகன் மற்றும் மணமகளின் Can Number தேவை. அதற்கு கீழே உள்ள Register என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விவரங்களை உள்ளீட்டு Submit என்பதை கொடுத்தவுடன் இப்போது CAN Registration Number உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
 • அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed கொடுக்கவும். பின்னர் Front Page-ல் மணமகன் மற்றும் மணமகளின் தொலைபேசி எண்களை உள்ளீட்டு Search கொடுத்தால் இருவரின் விவரங்களும் வந்துவிடும். உங்களுடைய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு Submit கொடுக்கவும்.
ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி?

Inter Caste Marriage Certificate in Tamil:

inter caste marriage certificate in tamil

 • இப்போது Inter-caste Marriage Certificate பக்கம் திறக்கும். அதில் மணமகன் மற்றும் மணமகள் பெயர், சாதி சான்றிதழ் போன்றவற்றை பதிவு செய்யவும்.
 • பிறகு திருமண தகவல்களை கொடுத்து Declaration ஆப்ஷனை கொடுத்து Submit செய்யவும்.

கலப்பு திருமண சான்று:

inter caste marriage certificate in tamil

 • பின்னர் அடுத்த பக்கம் ஓபன் ஆகும். அதில் List of Documents பகுதியில் புகைப்படம், முகவரி, சாதி சான்றிதழ், சுய அறிவிப்பு, திருமண சான்றிதழ் போன்றவற்றை 50 KB அல்லது PDF 200 KB அளவில் பதிவேற்றம் செய்யவும்.
 • பின்னர் Self Declaration படிவத்தை பதிவிறக்கம் செய்து, கையொப்பம் இட்டு, Scan செய்து Upload செய்ய வேண்டும். அடுத்து Make Payment என்ற ஆப்ஷனில் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கலப்பு திருமண சான்றிதழ் பெறுவது எப்படி?

 • இந்த விண்ணப்பத்தை அரசு அலுவலகங்கள் சரி பார்த்தவுடன், மொபைல் வழியாக தகவல்கள் அனுப்பப்படும்.
 • உங்கள் தகவல்களை தெரிந்து கொள்ள tnesevai.tn.gov.in வலைத்தளத்திற்கு சென்று உங்கள் தொலைபேசி எண் உள்ளீட்டு Check Status என்பதில் தங்களது Application Number-ஐ கொடுத்தால் உங்களது Status-ஐ தெரிந்து கொள்ள முடியும்.
திருமண உதவித்தொகை பெறுவது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil