கோவில் கனவில் வந்தால் என்ன பலன் | Kovil Kanavu Palangal in Tamil

kovil kanavu palangal

கனவில் கோவில் வந்தால் என்ன பலன் | Kovil Kanavu Palan

kovil kanavu palangal: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் கனவில் கோவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளுவோம்..! ஆன்மிகம் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு காரணம் நீங்கள் உங்களை பற்றி நினைக்காமல் மற்றவர்களுடைய நலனை மட்டுமே யோசிப்பதால் ஆன்மீக சம்பந்தமான கனவுகள் வரும். இப்படிப்பட்ட கனவுகள் நம் வாழ்க்கையில் நடக்கப்போகும் சில முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே தெரியப்படுத்துகிறது என்று அர்த்தமாகும். சரி வாங்க நண்பர்களே இப்போது கோவில் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம்..!

newஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..!

கோவில் கனவில் வந்தால் என்ன பலன்:

 1. kovil kanavu palangalஆலயம் செல்வது போல் கனவு கண்டால் நண்பர்களிடம் நீங்கள் கேட்ட உதவியும், அதற்கு ஆதரவும் கிடைக்கும்.
 2. கோவிலுக்குள் செல்வதற்கு முயற்சிக்கிறீர்கள் ஆனால் கூட்டத்தில் சிக்கிக்கொள்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தவிப்பீர்கள் என்று இந்த கனவானது கூறுகிறது.
 3. கோவிலில் நடக்கும் திருவிழாவை பார்ப்பது போன்று கனவில் வந்தால் நிறைய பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு நேரிடும். மேலும் விரைவிலேயே வாகனம் மற்றும் வீடு வாங்க போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
 4. ஆலயத்தில் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள், திடீரென்று கோவில் நடை சாத்துவது போல் கனவு கண்டால் செய்யும் தொழிலில் சிக்கல்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தமாகும்.
 5. கோவில் திருவிழா கூட்டத்தில் நீங்கள் யாரையோ தேடுகிறீர்கள் என்றால் தொழிலில் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் குடும்ப உறவுகளில் சில பிரச்சனைகள் வந்து நீங்கும்.
 6. கோவிலுக்கு சென்று கோவில் வாசலை நீங்களே திறப்பது போல் கனவு கண்டால் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தோல்வி இல்லாமல் வெற்றியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
 7. கோவிலில் சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரித்து காணப்படும். 
 8. கனவில் கோவிலின் கோபுரத்தை கண்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
 9. நவகிரகத்தினை உங்களுடைய கனவில் கண்டால் ஒரு சில பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
 10. கோவிலில் கொடுக்கும் உணவினை நீங்கள் வாங்குவது போல் கனவு கண்டால் சிலரால் உங்களுக்கு மனக்கஷ்டம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 11. ஆலயத்தில் நின்று விபூதி பூசுவது போல் கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கப்போகிறது என்று அர்த்தம்.
 12. கோவிலில் உள்ள தெப்பத்தினை கனவில் கண்டால் புதிய முயற்சிகளில் வெற்றி பெற போவதாக அர்த்தம்.
 13. மிகவும் பாழடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்கின்ற செயலில் தோல்வியும், பொருள் நஷ்டமும் உண்டாகும்.
 14. கோவில் மணியை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.
 15. கோவிலில் மணி அடிப்பது போன்று கனவு கண்டால் உங்களுக்கு அதிகமாக பொருள் சேரும்.
 16. ஆலயங்களில் உள்ள மணி கீழே அறுந்து விழுவது போல் கனவு கண்டால் செய்கின்ற காரியங்களில் திடீரென்று பல பிரச்சனைகள் வரக்கூடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil