தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏரி

Advertisement

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏரி | Lakes in Telangana Names in Tamil

தெலுங்கானா என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது ஆந்திரப் பிரதேச மாாநிலத்தில் இருந்து பிரிக்கப்ட்டு சூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது. தெலுங்கானாவை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 2013 ஆம் ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன. சரி இந்த பதிவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏரிகளை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏரியின் பெயர்:

1 பத்ரகாளி ஏரி:

இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏரிகளில் ஒன்று. பத்ரகாளி ஏரி (Bhadrakali Lake), வாரங்கலில் உள்ள ஒரு ஏரி ஆகும், தெற்கேனா ககாத்திய வம்சத்தின் கணபதி தேவாவால் கட்டப்பட்டது. பிரபலமான பத்ரகாளி கோயிலுக்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது.

2 துர்காம் செருவு ஏரி:

துர்கம் செருவு (Durgam Cheruvu) இராய்துர்கம் செருவு எனவும் அழைக்கப்படும் இது என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். 83 ஏக்கர்கள் பரவியுள்ள இது ஐதராபாத்து நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ஜுபிளி ஹில்ஸ் மற்றும் மாதாபூர் பகுதிகளுக்கு இடையில் மறைந்திருப்பதால் இந்த ஏரி “சீக்ரெட் ஏரி” என்றும் அழைக்கப்படுகிறது. ஏரியைக் கடந்து செல்லும் துர்கம் செருவு பாலம் செப்டம்பர் 2020இல் திறக்கப்பட்டது.

3 ஹிமாயத் சாகர்:

ஹிமாயத் சாகர் (Himayat Sagar) என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவில் அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரியாகும். இது ஒரு பெரிய செயற்கை ஏரியான ஓசுமான் சாகர் ஏரிக்கு இணையாக அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் சேமிப்பு திறன் 2.9 டி.எம்.சி அடியாக இருக்கிறது.

4 ஹுசைன் சாகர் – உசேன் சாகர்:

உசேன் சாகர் இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முசி ஆற்றின் கிளை ஆற்றில் கட்டிய 5.7 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஏரி. 1562ல் இப்ராகிம் குளி குதுப் ஷாவின் ஆட்சிக்காலத்தில் அசரத் உசேன் ஷா வாலி என்பவர் உசேன் சாகரைக் கட்டினார். இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லால் ஆன கௌதம புத்தரின் சிலையை 1992ல் அமைத்தனர். இந்த ஏரி ஐதராபாத் நகரை அதன் துணை நகரான செகந்தராபாத் அதிலிருந்து பிரிக்கிறது. உசேன் சாகரின் முடிவில் சயேதனி மாவின் கல்லறையான மசூதியையும் தர்காவையும் காணலாம். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 10 அடிகளாகும்.

5 லக்னாவரம் ஏரி:

லக்னாவரம் ஏரி தெலுங்கானா மாநிலம் கோவிந்தராவ்பேட்டை மண்டலத்தில் வாரங்கல் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு ஏரி. 10,000 ஏக்கர் பரப்பளவில் பரவி, சுமார் 2.135 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டுள்ள இந்த ஏரி 3,500 ஏக்கர் நிலத்தைப் பாசனம் செய்கின்றது.

6 மிர் ஆலம் டேங்க் (ஏரி):

மீர் ஆலம் டேங்க் ஏரி இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தில் உள்ள ஐதராபாத்து நகரத்தில் முசி ஆறு தென்புறத்தில் அமையப்பெற்றுள்ளது. இது ஐதராபாத்தின் முதன்மை குடிநீர் ஆதாரமாக ஓசுமான் சாகர் ஏரியும் மற்றும் இமாயத் சாகர் ஏரியும் உருவாகும் முன் இருந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை ஏழுடன் இணைக்கப்பட்டு உள்ளங்கை பள்ளத்தாக்கிற்கு அருகில் அமைந்துள்ளது.

7 ஓசுமான் சாகர் ஏரி:

ஓசுமான் சாகர் ஏரி (Osman Sagar Lake) என்பது மிர் ஓசுமான் அலி கான்-ஐதராபாத்தின் ஏழாவது நவாப்பால் ஐதராபாத்தின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஓர் செயற்கை ஏரியாகும். நகரிலிருந்து மேற்காக 21 கி.மீ.

தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி, 46 சதுர கி.மீ.பரப்பளவைக் கொண்டது. முசி ஆற்றின் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது.

சிறந்த பொழுது போக்குமிடமாக உள்ளது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டங்களும் படகு சவாரிக்கான வசதியும் மகிழ்வூட்டுவதற்கான பொழுதுபோக்கு அமைப்புகளும் கொண்டு விளங்குகிறது.

8 பைக்கால் ஏரி:

பைக்கால் ஏரி என்பது உருசியாவின் (ரஷ்யாவின்) தென் சைபீரியாவில் இர்கூத்க்க் மாகாணத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் மிகப்பெரிய ஏரி) ஆகும்.

இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமான ஏரி ஆகும். இதன் ஆழம் 1,642 m (5,387 ft), மிக அதிகளவு 23,615.39 கிமீ 3 (5,670 cu mi) தூய நீரும் கொண்ட ஏரி இதுவே.

இது உலகில் உள்ள ஏரிகள் யாவிலும் தெளிவான, உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும். இது – 25 மில்லியன் ஆண்டுகள பழமையானதாக கருதப்படுகிறது.

9 சரூர்நகர் ஏரி:

சரூர்நகர் ஏரி (Saroornagar Lake) இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஏரி. 1626 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்திலிருந்தே, 1956 ஆம் ஆண்டில் ஹைதராபாத் விரிவடைந்தபோது இந்த ஏரியானது மிகவும் தூய்மையாக இருந்தது.

99 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவில் 2003-04 ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 200 மில்லியன் (அமெரிக்க $ 3.1 மில்லியன்) செலவில் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.

ஏரியின் மறுசீரமைப்பிற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்த பறவைகள் பெரிய எண்ணிக்கையில் ஏரிக்குத் திரும்பின.

10 சமிர்பேட்டை ஏரி:

சமிர்பேட்டை ஏரி (Shamirpet lake) தென்னிந்திய பிராந்தியமான தெலுங்கானா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் என, இருமாநில தலைநகராக விளங்கும் ஐதராபாத்து அருகே உள்ள ஒரு செயற்கை ஏரியாகும்.

மேலும் சிக்கந்தராபாத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது, ஐதராபாத் நிசாம் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

11 வாத்தேபல்லி ஏரி:

வாத்தேபல்லி ஏரி (Waddepally Lake) இது, இந்தியாவின் 29 வது மாநிலமான தெலுங்கானா, மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்திலுள்ள அனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும்.

இந்த ஏரி அனம்கொண்டா, மற்றும் காசிபேட்டை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒரு நீர்த்தேக்கமாக உள்ளது.

12 இராமப்பா ஏரி:

இராமப்பா ஏரி (Ramappa Lake) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாராங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

காக்கத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட முதன்மையான நீர்த்தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஒக்புரோ இராமப்பா ஏரி வாராங்கல் மாவட்டத்திலுள்ள ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

13 கங்காரம் செருவு:

கங்காரம் செருவு ஏரி என்பது தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியாகும்.

14 அமீன்பூர் ஏரி:

அமீன்பூர் ஏரி (Ameenpur lake) என்பது தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாதில் உள்ள ஒரு செயற்கை ஏரி ஆகும். இந்த ஏரியைத் தெலுங்கானா அரசு ‘இந்தியாவின் முதல் பாரம்பரிய பல்லுயிரி அமைவிடம்’ என்று அறிவித்துள்ளது.[1] ஐதராபாத் நகரின் மேற்கில் நவீனக் குடியிருப்புகளின் சூழலில், தொழிற்சாலைகளாலும், கிராமத்தாலும் சூழப்பட்ட இடத்தில் பரந்து விரிந்த இந்த ஏரி காணப்படுகிறது. கோல்கொண்டாவை கி.பி. 1550 முதல் 1580 வரையில் ஆண்ட இப்ராஹிம் குதுப் ஷா காலத்தில் அமீன்பூர் ஏரி உருவாக்கப்பட்டது.

15 ஃபாக்ஸ் சாகர் ஏரி:

ஃபாக்ஸ் சாகர் ஏரி என்பது தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியாகும்.

16 கந்திகுடம் செருவு:

கந்திகுடம் செருவு ஏரி என்பது தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியாகும்.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement