விடுப்பு விண்ணப்பம் எழுதும் முறை | Leave Letter in Tamil

Leave Letter in Tamil

விடுப்பு விண்ணப்பம் எழுதுவது எப்படி? | School Leave Letter Format in Tamil

பொதுநலம் அன்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் விடுப்பு விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம். விடுப்பு விண்ணப்பம் எழுதுவது ஒன்றும் அவ்வளவு சிரமம் இல்லை. இரண்டே நிமிடத்தில் எழுதிவிடலாம். ஆனால் அப்படிப்பட்ட மிக எளிமையான லீவ் லெட்டரை இன்னும் படிக்கும் மாணவர்களுக்கு சரியாக எழுத தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். வாங்க இந்த பதிவில் விடுப்பு விண்ணப்பம் எப்படி ஈசியாக எழுதலாம் என்று பார்க்கலாம்.

காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி?

விடுமுறை விண்ணப்பம் கட்டுரை – Leave Letter in Tamil

விடுப்பு விண்ணப்பம்

அனுப்புநர் 

                      XXXX (பெயர்),
                     வகுப்பு (அதன் பிரிவு),
                     பள்ளியின் பெயர், 
                     ஊர்.

பெறுநர்  

                      வகுப்பு ஆசிரியர்/ ஆசிரியை அவர்கள், 
                     பள்ளியின் பெயர்,
                     ஊர்.

 மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,

பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்.

வணக்கம், எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு வர இயலவில்லை.

                    ஆகவே, விடுப்பு எடுக்கும் தேதியை குறிப்பிட்டு உதாரணத்திற்கு (01.02.2022) முதல் (04.02.2022) வரை இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information In Tamil