கையில் மருதாணி போட்டால் சிவக்கவில்லையா இனி கவலை வேண்டாம் இதை செய்திடுங்கள்

Advertisement

மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் உதவிடும் வகையில் இன்றைய பதிவில் மருதாணி சிவக்க என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்வோம். பொதுவாக விழா காலங்களில் கை கால் வரை மருதாணி போட்டு கொண்டால் விழாக்களில் அது ஒரு தனி அழகை தரும் அந்த வகையில் கையில் சிவக்குவதை வைத்து யாரை நினைத்தோமோ அவர்களில் மீதி அதிகளவு பாசம் வைத்திருக்கிறோம் என்று நிறைய விதமாக சொல்லி மருதாணி போட்டுவிடுவார்கள் மணமக்களுக்கு. ஆனால் கைகள் சிவக்க அது மட்டுமே காரணம் ஆகுமா என்று கேட்டால் கிடையாது அதற்கு நிறைய காரணம் உள்ளது வாங்க தெரிந்துகொள்ளவோம்..

மருதாணி சிவக்க டிப்ஸ்:

டிப்ஸ் -1

மருதாணியை பறித்துவந்து அதனை கழுவிக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை – 1 ஸ்பூன், கிராம்பு – 2, எலுமிச்சை பழ சாறு – 2 டேபிள் ஸ்பூன் போட்டு அதனையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். இதில் நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. அரைத்து பின் அதனை பக்குவமாக எடுத்து கையில் போட்டுக்கொள்ளுங்கள் 10 நிமிடத்தில் நிச்சயம்  சிவந்து விடும்.

டிப்ஸ் -2

மருதாணி அரைக்கும் போது அதில் கொட்டை பாக்கை சேர்த்து அரைத்து பாருங்கள் மருதாணி சிவந்து விடும்.

டிப்ஸ் -3

சிலர் எலுமிச்சை பழத்திற்கு புளியை சேர்த்து அரைப்பார்கள் அதுவும் நன்றாக சிவப்பு நிறத்தை கொடுக்கும்.

டிப்ஸ் -4

எந்த பொருள்களை சேர்த்து அரைத்தாலும் அதில் கடைசியாக நீலகிரி தைலம் என்று சொல்லப்படும் யூகலிப்டஸ் லிக்விட் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிட்டு அதன் பின் கையில் போட்டுகொண்டால் சூப்பராக சிவக்கும்.

டிப்ஸ் -5

முதலில் மருதாணி போட்டு சிவந்தவுடன் கையில் உங்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும் அதன் பின் உங்களுக்கு சிவப்பு கலரில் மாறிவிடும் அதனை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

டிப்ஸ் -6

மருதாணி போட்ட பிறகு அது நன்கு சிவந்து இருக்கும் இருந்தாலும் உங்களுக்கு நன்றாக சிவக்க வேண்டும் என்றால் உடனே கையில் உள்ளதை எடுத்துவிட்டு அதாவது காய்ந்து விட்டால் அதுவே கீழ் விழுந்து விடும் அதனால் அதனை அப்படியே எடுத்து விட்டு கையில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கையில் தேய்த்துக்கொண்டு பின்பு 1/2 மணி நேரத்தில் கையை தண்ணீரில் கழிவி விட்டால் சூப்பராக சிவந்து இருக்கும்.

கொட்டாங்குச்சியில் மருதாணி செய்வது எப்படி?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement