மாட்டு பொங்கல் என்பது தை பொங்கலுக்கு மறுநாள் உழவர் திருநாள் என்று சொல்லக்கூடிய மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கலானது கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கல் அன்று மாடுகள் இருக்கும் தொழுவத்தை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி மாட்டிற்கு மஞ்சள், குங்குமம், கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் சலங்கை கட்டி மாட்டினை அழகுபடுத்துவார்கள். மாட்டினை அலங்கரித்த பிறகு மாட்டின் தொழுவத்திலே பொங்கல் வைத்து மாட்டிற்கு தீபம் காட்டி வழிபாடு செய்வார்கள். மாட்டு பொங்கல் அன்று உலக புகழ்ப்பெற்ற விழாவான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இது தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்த பதிவில் மாட்டு பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் மாட்டிற்கு பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..