புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் சுவாரசியமான மற்றும் புதுமையான ஒரு தகவலை பற்றி தான். அப்படி என்ன தகவல் என்றால் சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்களை பற்றி தான் தெரிந்துகொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
புதன் கிரகம் பற்றிய தகவல்:
புதன் கிரகம் தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்.
இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகவும் சிறிய கோள் ஆகும் .
இந்த புதன் கிரகம் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 176 நாட்கள் தேவைப்படுகிறது. அதேபோல் சூரியனை சுற்றி வருவதற்கு 88 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
புதன் தோற்றத்தில் பூமியின் நிலவை போல இருக்கும்.
பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர்.
புவியிலுருந்து சூரியனை பார்ப்பதை விட புதனிலிருந்து சூரியனை பார்ப்பதற்கு 3 மடங்கு பெரியதாக இருக்கும்.
புதன் கிரகம் தான் சூரிய குடும்பத்தில் இரண்டாவது வெப்பமான கோள். ஏனென்றால் புதனில் வளிமண்டலமே(atmosphere)கிடையாது. இதன் சராசரி வெப்பநிலை 350°C ஆகும்.
சூரிய குடும்பத்தில் புதன் கோள் மிக சிறிய கோள் என்றாலும் இதன் எடை பூமியின் எடைக்கு நிகராக இருக்கும். இதற்கு காரணம் புதனின் மைய பகுதி 75% இரும்பாக இருக்கிறது.
புதனின் ஈர்ப்பு விசை பூமியை விட மிக குறைவு. உதாரணமாக நீங்கள் பூமியில் 100 கிலோவாக இருந்தீர்கள் என்றால் புதனில் 38 கிலோவாகத் தான் இருப்பீர்கள்.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |