பாசிப்பருப்பை உபயோகிப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

 பாசிப்பருப்பு | Moong Dal in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஒரு பயனுள்ள தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.  அதாவது நம் வீட்டில் அதிகமாக சமையல்களுக்கும்,  அதிகமாக பயன்படுத்தப்படும் பாசிப்பருப்பை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இந்த பாசிப்பருப்பை உணவில் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது. மேலும் இந்த பாசிப்பருப்பு எங்கு விளைகிறது என்றும் இவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை பற்றியும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பருப்பை எப்படி சமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.!

பாசிப்பருப்பு என்றால் என்ன:

இந்த பாசிப்பருப்பை பாசிப்பயிறு, பயித்தம் பருப்பு என்று சொல்வார்கள். இவை பச்சைப் பயிறு என்றும் சிறு பயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இவை பூக்கும் தாவரம் பிரிவை கொண்டவையாகும். இந்தியாவை துணைக்கண்டமாக கொண்ட இந்த பயிர் சீன, கிழக்காசயா,  இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.

Moong Dal Health Benefits in Tamil:

பாசிபருப்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பிற பருப்புகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை போல இதிலும் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட், புரோட்டீன் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த பாசிப்பருப்பை உணவுகளில் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும், செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது. மேலும் இவற்றால் ஏற்படும் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

 பாசிப்பருப்பு பயன்கள்:

முளைகட்டிய பச்சை பயறுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல மாற்றங்களை செய்கிறது. பச்சை பயிரில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளதால் இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை தடுத்து இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு உதவியாக இருக்கிறது.

இவை அதிகமான புரதசத்துக்களையும், குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களையும் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் தமிழகத்தில் பொங்கல், பாயாசம், கஞ்சி, கொழுக்கட்டை போன்ற உணவுகளின் இன்னும் இவை சேர்த்து  சாப்பிடப்படுகின்றன.

பெண்கள் திருநாள் அன்று  பாசிப்பருப்பை  சர்க்கரை பொங்கலில் சேர்த்து சமைக்கிறார்கள்.  அதோடு மட்டுமல்லாமல் சாம்பார் வைக்கும் துவரம் பருப்புக்கு பதிலாக இந்த பாசிப்பருப்பும்  சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் அரிசியுடன் சேர்த்து பாசிப்பருப்பு கஞ்சாக குடிக்கப்படுகிறது.

பாசிபருப்பில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது மன அழுத்தம் மற்றும்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement