தூங்கி எழுந்ததும் இதுபோன்ற விஷயங்களை தவறாமல் கடைபிடியுங்கள்..!

Morning Habits in Tamil

 Morning Habits in Tamil..!

ஹலோ வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒரு மனிதனுக்கு இரவு தூங்குவதும் காலையில் எழுவதும் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு விஷயம் ஆகும். தூக்கம் என்பது அனைவருக்குமே வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது அது உங்களுக்கு புதிய நாளாக தொடங்கும். அப்படி தொடங்கும் நாளை எப்படி ஆரம்பிப்பீர்கள். நாம் தூங்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி இருக்கும் போது விடியல் என்பது நம் அனைவருக்குமே ஒரு வரம் என்றே கூறலாம்.

அப்படி நீங்கள் தொடங்கும் அந்த நாளை சிறப்பாக தொடங்குவது அவசியம் தானே…  அப்படி நீங்கள் தூங்கி எழும்போது சில நல்ல விஷயங்களை தவறாமல் கடைபிடியுங்கள். நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் —> காலையில் எழுந்தவுடன் முதலில் என்ன குடிக்க வேண்டும் தெரியுமா..?

தூங்கி எழுந்ததும் செய்யவேண்டிய செயல்கள் என்ன..? 

அதிகாலை எழ வேண்டும்: 

தினமும் தூங்கி எழும்போது அதிகாலையில் எழ வேண்டும். அதிகாலையில் எழுவது உடலுக்கு மிகவும் நல்லது. தூக்கம் எவ்வளவு முக்கியமோ அதேபோல அதிகாலை எழுவதும் முக்கியம். அதிகாலை எழுவதால் ஒருவிதமான நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. அதேபோல் அதிகாலையில் எழுவதால் அந்த நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

சோம்பல் முறிக்க வேண்டும்:

சோம்பல் முறிக்க வேண்டும்

நீங்கள் தினமும் காலையில் தூங்கி எழும்போது சோம்பல் முறிக்க வேண்டும். சோம்பல் முறிப்பது என்பது ஒரு நல்ல செயல் ஆகும். தூங்கி எழுந்ததும் சோம்பல் முறிப்பதால் உடலில் இருக்கும் அசதிகள் நீங்கி அந்த நாள் புத்துணர்ச்சி கிடைக்கும். அதனால் நீங்கள் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

நாம் வளர்க்கும் உயிரினங்கள் கூட தூங்கி எழும்போது சோம்பல் முறிப்பதை நாம் பார்த்திருப்போம். உங்கள் கை மற்றும் கால்களை உதற செய்து உடலை அசைத்து விட வேண்டும்.  இப்படி செய்வதால் நடக்கும் நன்மைகளை நீங்களே உணர்வீர்கள்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இதை செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!

தியானம் செய்யுங்கள்:

தியானம் செய்யுங்கள்

தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதால் நமது உடலில் உள்ள உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. தியானம் செய்வதால் உங்கள் மனம் அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். தினமும் காலையில் தியானம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது.

அதுமட்டுமின்றி யோகா பயிற்சிகள் செய்வதால் உடலில் ஏற்படக்கூடிய பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. அதனால் தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்யுங்கள். தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

தண்ணீர் குடிக்க வேண்டும்:

தண்ணீர் குடிக்க வேண்டும்

காலையில் எழுந்ததும் பல் துலக்கி விட்டு தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக செல்லும். அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெரும். தண்ணீர் குடிப்பதால் உடலில்  நோய்கள் வராமல் தடுக்கலாம். அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com