கொசுவை விரட்ட மிக எளிமையான முறை..! Mosquito Repellent Homemade in Tamil..!

Advertisement

கொசுவை விரட்ட என்ன செய்ய வேண்டும்?

Mosquito Repellent Homemade in Tamil..! வணக்கம் நண்பர்களே இன்று நாம் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள கொசுவை விரட்ட ஒரு அருமையான டிப்ஸை பற்றி தெரிந்து கொள்வோம். வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் கொசுக்களின் ஆதிக்கம் மிக அதிகமாகவே இருக்கும். இப்பொழுது வேற மழைக்காலம் தொடங்கிவிட்டது. கொசுக்களினால் இரவு நேரங்களில் சரியாக நாம் உறங்ககூட முடியாது. மேலும் இந்த கொசுக்களினால் பலவகையான நோய்களும் ஏற்படுகின்றன, அதாவது டெங்கு, மலேரியா போன்ற கொடூரமான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த கொசுக்களை ஒழிக்க நாம் Good Night மற்றும் All Out போன்றவற்றை பயன்படுத்துவோம். அவற்றை பயன்படுத்தும் சில நேரங்களில் மட்டும் கொசு தொல்லை இல்லாமல் இருக்கும். ஆனால் அதன்பிறகு கொசு வீட்டுக்குள் ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். இந்த Good Night மற்றும் All Out பயன்படுத்தும் பொழுது சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு சுவாச பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு கொசுவை ஒழிக்க ரோஸ்மேரி இலைகளை பயன்படுத்தி ஓரு அருமையான டிப்ஸினை இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து தங்கள் வீட்டில் ட்ரை செய்து பலன் பெருங்கள்..

கொசுவை விரட்ட இயற்கை வழிகள்..!

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை / Mosquito Repellent Homemade in Tamil..! 

தேவையான பொருட்கள்:-

  1. ஜாடி – ஒன்று
  2. பச்சை நிற எலுமிச்சை பழம் –
  3. மஞ்சள் நிற எலுமிச்சை பழம் –
  4. எசன்ஷியல் ஆயில் (Essential oil)10 துளிகள்
  5. தண்ணீரில் மிதக்கும் மெழுகுவர்த்தி (Floating tea lights)1
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. ரோஸ்மேரி இலைகள் – சிறிதளவு

செய்முறை..!

Mosquito Repellent Homemade in Tamil Step: 1

lemon

முதலில் பச்சை நிற எலுமிச்சை பழம் மற்றும் மஞ்சள் நிற எலுமிச்சை பழம் இவை இரண்டையும் வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

Step: 2

Mosquito

பிறகு ஒரு சுத்தமான ஜாடியை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கொத்து ரோஸ்மேரி இலைகளை போட வேண்டும்.

அதன்பிறகு ஜாடியில் முக்கால் அளவிற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்.

ஜாடியில் தண்ணீர் நிரப்பிய பிறகு 10 துளிகள் எசன்ஷியல் ஆயிலை (Essential oil) ஊற்ற வேண்டும்.

Step: 3

பிறகு நறுக்கி வைத்துள்ள எலுமிச்சை துண்டுகளை ஜாடியில் சேர்க்க வேண்டும்.

Step: 4

இறுதியாக தண்ணீரில் மிதக்கும் மெழுகுவர்த்தி (Floating tea lights) ஒன்றை அந்த ஜாடியில் ஏற்றி வைக்கவேண்டும்.

mosquito killer homemade in tamil

Step: 5

பிறகு இந்த ஜாடியினை தங்கள் வீட்டின் நடுப்பகுதியில் வையுங்கள் இவ்வாறு வைப்பதினால் ஜாடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களில் இருந்து வரும் நறுமணத்தினால் கொசுக்கள் உங்கள் வீட்டிற்கு வராது அதேபோல் வீட்டுக்குள் இருக்கும் கொசுக்களும் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

ஜாடியில் உள்ள நீர் மற்றும் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும் இல்லையெனில் ஜாடியில் இருந்து கெட்ட துறுநாற்றம் வீச ஆரம்பிக்கும்.

 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement