முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Muskmelon in Tamil

ஹலோ வாசகர்களே..! பொதுவாக நாம் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று முலாம்பழம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதற்கு முன் உங்களுக்கு முலாம்பழம் பிடிக்குமா சொல்லுங்கள். நம்மில் பலரும் முலாம்பழத்தை பார்த்திருப்போம். அதை யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கிறீர்கள்..! அப்படி முலாம்பழத்தை சாப்பிட்டு இருந்தால் இந்த பதிவின் வாயிலாக முலாம்பழம் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முலாம்பழம் பற்றிய தகவல்: 

முலாம்பழம் பற்றிய தகவல்

இது முலாம்பழம் அல்லது கிர்னிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Cucumis melo அல்லது Muskmelon என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முலாம்பழங்கள் இரண்டு வகையான பண்டைய எகிப்து மற்றும் பிற குடியேறிய பகுதிகளில் அறியப்பட்டன. சில தாவரவியலாளர்கள் முலாம்பழங்களை லெவன்ட் மற்றும் எகிப்தின் பூர்வீகமாகக் கருதுகின்றனர். அதுபோல மற்றவர்கள் பெர்சியா, இந்தியா அல்லது மத்திய ஆசியாவில் தோன்றியதாகக் கருதுகின்றனர். இதனால் முலாம்பழத்தின் தோற்றம் நிச்சயமற்றது.

அதனால் ஈரான், இந்தியா, உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை முலாம்பழம் உற்பத்திக்கான மையங்களாக இருக்கின்றன. முலாம்பழங்கள் மோனோசியஸ் தாவரங்கள் ஆகும். மேலும் முலாம்பழம் ஒரு வருடாந்திர மூலிகையாகும்.

நீங்க வில்வ பழத்தை பார்த்திருக்கிறீர்களா.. அப்போ இதை தெரிஞ்சிக்கலனா எப்படி

வளரும் தன்மை: 

வளரும் தன்மை

இது துணை வெப்பமண்டல அல்லது சூடான, மிதமான காலநிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. முலாம்பழங்கள் சூடான, நன்கு உரமிடப்பட்ட மண்ணில் நன்றாக வளருகின்றன. அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நல்ல வடிகால்  கொண்டவை.

வெள்ளரிப்பழம் போன்ற சுவையும் இதற்கு உள்ளது. இதன் விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளையும் ஒதுக்கிவிட்டு உண்ணவேண்டும். கிரினிப் பழத்தின் தோல் வலிமையாகவும், தடிப்பாக இருக்கும். இது கோடைகாலத்தில் பலன் தரும் கொடிப்பயிர் வகை ஆகும்.

சீத்தாப்பழத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா.. இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

முலாம்பழம் ஊட்டச்சத்துகள்: 

முலாம்பழம் ஊட்டச்சத்துகள்

முலாம்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் பிற ஆரோக்கியமான குணங்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நீர்சத்துகள் போன்றவை காணப்படுகிறது.

மேலும் இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 கிர்ணி பழம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil