நாமக்கல் கவிஞர் குறிப்பு | Namakkal Kavignar Kurippu Varaiga

Advertisement

Namakkal Kavignar Kurippu Varaiga

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். சரி இந்த பதிவில் இத்தகைய புகழ் பெற்ற மனிதனை பற்றிய சில குறிப்புகளை நாம் படித்தறியலாம் வாங்க.

நாமக்கல் கவிஞர் குறிப்பு:

இயற்பெயர்: இராமலிங்கம் பிள்ளை
பிறப்பு: அக்டோபர் 19, 1888
நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர்: மோகனூர் – நாமக்கல் மாவட்டம்
பெற்றோர்: அம்மணிம்மாள், வெங்கடராமன்
மறைவு: ஆகஸ்ட் 24, 1972

ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு

நாமக்கல் கவிஞர் வாழ்க்கை வரலாறு:

கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பழைய சேலம் மாவட்டம் தற்போது உள்ள நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர் தான் “நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை”. இராமலிங்கனாரின் தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார்.

நாமக்கல் கவின்கரின் பள்ளி வாழ்கை:

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909-யில் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களில் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912-யில் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது. ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது.

பாரதிதாசன் இயற்பெயர் என்ன?

ஆற்றிய பணிகள்:

இவர் ஆரம்ப காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்பு தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்து வந்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர்.

தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், ‘பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கவிஞரின் நாட்டுப்பற்று:

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ்பெற்ற மேற்கோள்கள்:

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’
தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு’
‘தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

நாமக்கல் கவிஞர் படைப்புகள்:

  1. இசை நாவல்கள் – 3
  2. கட்டுரைகள் – 12
  3. தன் வரலாறு – 3
  4. புதினங்கள் – 5
  5. இலக்கிய திறனாய்வுகள் – 7
  6. கவிதை தொகுப்புகள் – 10
  7. சிறுகாப்பியங்கள் – 5
  8. மொழிபெயர்ப்புகள் – 4

நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள் யாவை:

  1. மலைக்கள்ளன் (நாவல்)
  2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
  3. பிரார்த்தனை (கவிதை)
  4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  5. திருக்குறளும் பரிமேலழகரும்
  6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்
  7. திருக்குறள் புது உரை
  8. கம்பனும் வால்மீகியும்
  9. கம்பன் கவிதை இன்பக் குவியல்
  10. என்கதை (சுயசரிதம்)
  11. அவனும் அவளும் (கவிதை)
  12. சங்கொலி (கவிதை)
  13. மாமன் மகள் (நாடகம்)
  14. அரவணை சுந்தரம் (நாடகம்)
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement