20 லட்சம் பணம் எடுக்கவும் வங்கியில் போடவும் புதிய கட்டுப்பாடு என்ன தெரியுமா?

New Restrictions To Withdraw and Deposit Money

வங்கியில் Deposit  மற்றும் Withdraw செய்வதற்கு  புதிய கட்டுப்பாடுகள்? | New Restrictions To Withdraw and Deposit Money in Tamil 

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் பதிவில் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். அது என்ன தகவல் அப்படியென்று யோசிப்பீர்கள். அதை பற்றி பார்ப்போம் வாங்க.

இந்தியாவிலுள்ள அனைத்து நிதி ரீதியிலான பணபரிவர்த்தனைகளையும் செய்வதற்கு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு பயன்பட்டு வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் டெபாசிட் செய்வதற்கு ஆதார் கார்டு அவசியம் என அறிவித்துள்ளது. வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் போட்டாலும் அல்லது பணம் எடுத்தாலும் பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் வேண்டுமென்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு, பான் கார்டு அவசியம்:New Restrictions To Withdraw and Deposit Money

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கோ அல்லது ரொக்க கடன் கணக்கு தொடங்குவதற்கோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் இருக்கவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய பணபரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் கார்டு அவசியம்:

New Restrictions To Withdraw and Deposit Money

மத்திய அரசு தற்போது வருடத்திற்கு 20 லட்ச ரூபாய் என வரம்பு வைத்துள்ள நிலையில் 50,000 ரூபாய்க்கு மேல் பணபரிவர்த்தனை செய்யவேண்டுமென்றால், பான் கார்டு கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற  பணபரிவர்த்தனைகள் பெரிமளவில் செய்யவேண்டுமென்றால் கட்டாயம் ஆவணங்களை காட்டவேண்டிருக்கும்.

பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் தெரிந்து கொள்ளுங்கள்

பான் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிதியாண்டில் 50,000 ருபாய் அல்லது 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிவர்த்தனை செய்யும்போது, கட்டாயம் பான் கார்டு வைத்திருக்கவேண்டும்.  இல்லையென்றால், பான் கார்டு எண்ணிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். காரணம், நிதி மோசடிகள், வருமான வரி மோசடிகள் என பல பிரச்சனைகளில் இருந்தும் தவிர்க்க இது வழிவகுக்கும்.

பணபரிவர்த்தனைகளை தடுக்க:

ரூ.20 லட்சம் என்பது டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுவதற்கான வரம்பு என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியில் கணக்கை விட அதிகமாக இருந்தால், 20 லட்ச ரூபாய் வரம்பை கணக்கிடும் போது, அத்தகைய ஒவ்வொரு கணக்கிலிருந்தும் டெபாசிட் அல்லது திரும்பபெறுதல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.

அரசு கறுப்பு பணங்களை ஒழிப்பதற்கு பல்வேறு பணரிவர்த்தனை வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் மோசடியான சில பணபரிவர்த்தனைகளை தடுப்பதற்கு பயன்படுகிறது. அரசு சில பணபரிவர்த்தனைகளுக்கு இதுபோன்ற தடைகளை விதித்துள்ளது.

IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி

கட்டுப்பாடுகள் என்ன?

  • மேலும், பணப்பரிவர்த்தனை போன்றவற்றை செய்யவிரும்பும் எந்தவொரு நபரும் பரிவர்த்தனை தேதிக்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாகவே பான் கார்டு ஒதுக்கீட்டுக்கு  விண்ணப்பித்திருக்க வேண்டும்.
  • அரசு முக்கிய காரணமாக கணக்கில் வராத பணபரிவர்த்தனைகளை வைப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.
  • பான் கார்டு, அத்தகைய பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கும்.
  • இந்தியாவின் வருமான வரி சட்டங்கள் எந்த காரணத்திற்காகவும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைகளை தடை செய்கின்றன. உதாரணமாக, 3 லட்சம் மதிப்பிலான தங்கத்தினை வாங்குவதற்கு, காசோலை அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி கணக்கின் மூலமாக பண பரிவர்த்தனை செய்யலாம்.
  • எந்தவொரு குடும்ப உறுப்பினரிடமிருந்து நீங்கள் பணம் பெற்றாலும், இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும். எனவே, ஒரேநாளில் நெருங்கிய உறவினர்களிடம் இருந்தும் 2 லட்ச ரூபாய்க்கு மேல், ரொக்கமாக தனிநபர் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியாது.
  • மேலும் இதேபோன்று நன்கொடையாளரிடமிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பரிசை கூட ஏற்றுகொள்ளவதை அரசாங்கம் தடைசெய்கிறது. இந்த விதியை மீறி 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கத்தை பெறுபவர்கள் பெறப்பட்ட தொகைக்கு சமமான அபராதத்தை சந்திக்க நேரிடும்.
  • வரி திட்டமிடலின் போது நீங்கள் ரொக்கமாக சுகாதார காப்பீட்டிற்கு பணம் செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வரி செலுத்துவோர் காப்பீட்டு பிரீமியத்தை பணமாக செலுத்தினால், அவர்கள் பிரிவு 80D விலக்குக்கு தகுதியற்றவர்கள். இதை வங்கி அமைப்பின் மூலம் செய்ய வேண்டும்.
  • ஒருவர் நிதி நிறுவனம் அல்லது நண்பரிடம் பணக்கடன் வாங்கினால், மொத்த தொகை 20,000-க்கு மேல் இருக்கக்கூடாது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் இதே கட்டுப்பாடு பொருந்தும். கடனைத் திருப்பி செலுத்துவது நிதி வழி மூலம் செய்யபட வேண்டும்.
  • ஒரு சொத்து பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 20,000 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது. விற்பனையாளர் முன்பணத்தை ஏற்றுக்கொண்டாலும் வரம்பு அப்படியே இருக்கும்.
  • சுயதொழில் வரி செலுத்துவோர் என்று வருவோர்க்கு, ஒரே நாளில் ஒரு நபருக்கு ரொக்கமாக செலுத்தப்பட்டால், 10,000 ரூபாய்க்கு மேல் எந்த செலவையும் அவர்கள் கோர முடியாது. ஒரு ட்ரான்ஸ்போர்ட்டருக்குக் கொடுக்கப்படும் கட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 என்று சட்டம் நிறுவுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil