நிலநடுக்கம் எவ்வாறு உருவாகிறது? | Nilanadukkam Evvaru Uruvagirathu Tamil

Advertisement

நிலநடுக்கம் காரணங்கள் | Reason For Earthquake in Tamil

இந்த உலகம் பலவிதமான இயற்கை சீற்றங்களை சந்தித்திருக்கிறது. இயற்கை சீற்றங்கள் என்பது சமூக செயல்பாடுகள், பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் போன்றவற்றில் பேரழிவுகளை உண்டாக்கி இயற்கை வளங்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு செய்யும் செயல்பாடுகள் இயற்கைச் சீற்றங்கள் எனப்படும். சூறாவளி, புயல், சுனாமி, எரிமலை சீற்றங்கள் மற்றும் நிலநடுக்கம் போன்றவைகள் இயற்கை சீற்றங்கள். இது போன்ற சீற்றங்கள் சாதாரணமாக வருவதில்லை, ஒவ்வொரு சீற்றங்களுமே ஒவ்வொரு செயல்பாடுகளினால் உருவாகிறது, அந்த வகையில் இந்த பதிவில் நிலநடுக்கம் எவ்வாறு உருவாகிறது என்பதை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நிலநடுக்கம் எவ்வாறு உருவாகிறது

நிலநடுக்கம் ஏற்பட காரணம்:

  • பூமியின் அடிப்பகுதி பல அடுக்குகளை கொண்டு அமைந்துள்ளது. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது தளத்தட்டுக்கள் நகர்வதனால் உருவாகிறது. இந்த தட்டுகளை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம்.
  • இரண்டு பூமித்தட்டுகள் விளிம்பு எல்லைகளை ஒட்டி வெவ்வேறு திசைகளில் நகரும் போது ஒரு குறிப்பிட்ட‍ எல்லை வரை அழுத்தத்தை தாங்கி கொண்டிருக்கும். அதன் பிறகு அழுத்த‍ம் தாங்க முடியாமல் உடைந்து விடும், அப்போது அதிக அளவு சக்தி வெளியேற்றப்படும் அதனால் தான் நிலத்தில் அதிர்வுகள் ஏற்பட்டு நில நடுக்கம் உருவாகிறது.

நிலநடுக்கம் எவ்வாறு உருவாகிறது?

  • பூமியின் அடியில் நகரும் பிளேட்டுகள் உள்ளது, அது 7 பிளேட்டுகள் பெரியதாகவும், 1 டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளது.
  • இந்த 7 பிளேட்டுகளில் ஐந்து கண்டங்கள் மற்றும் பசிபிக் போன்ற இடங்கள் அடங்கும். இதன் அடியில் இருக்கும் பாறைகள் எரிமலை குழம்பு போல இருக்கும்.
  • இந்த பாறை குழம்பு பூமியின் சுழற்சியால் நகர்கிறது, மேலும் மேலே உள்ள பிளேட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசி நகர்கிறது.
  • இது 1 செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ வரை நகர்கிறது. இந்த பிளேட்டுகளின் சிறிய உராய்வும் நிலநடுக்கம் உருவாகுவதற்கு காரணமாக உள்ளது.
  • இயற்கையான நிலநடுக்கம் பூமியில் உள்ள மாற்றத்தால் ஏற்படுகிறது. நிலநடுக்கம் மனிதர்கள் மூலம் செயற்கையாகவும் ஏற்படுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயுவை சேமிப்பதற்காக பூமியின் அடிப்பகுதியில் பயன்படுத்தப்படும் கருவியின் மூலம் உருவாகிறது.

நிலநடுக்கம் அளவிடும் கருவி:

  • நில அதிர்வுமானி கருவியின் மூலம் நில அதிர்வுகள் கணக்கிடப்படுகிறது. அதிர்வுகள் 3 ரிக்டர் அளவுக்கு குறைவாக இருந்தால் நிலநடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
  • 7 ரிக்டர் அளவுக்கு அதிர்வுகள் இருந்தால் அது பூமியில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும்.
  • நம்மால் உணர முடியாத அதிர்வுகளை கூட நில அதிர்வுமானி கருவியின் மூலம் கண்டறிய முடியும். பூகம்பத்தில் ஏற்படும் அதிர்வலைகள் மின் அலைகளாக மாற்றப்படும். பின் மின் கருவியில் பதிவு செய்யப்பட்டு, கணினியின் உதவியுடன் இந்த பதிவுகளை ஆய்வு செய்ய முடியும்.
  • இந்த பதிவுகள் மூலம் நிலநடுக்க‍ம் ஏற்பட்ட‍ இடம், ஏற்பட்ட‍ நேரம், சக்தியின் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

நிலநடுக்க அலைகளை பதிவு செய்யும் கருவியின் பெயர்:

  • புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை நில அதிர்வு மானி (Seismograph) என குறிப்பிடுகின்றனர்.
யானை பற்றி சில வரிகள்

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement