எண்ணெய் பாத்திரத்தை ஈசியாக தேய்க்க டிப்ஸ் | Oil Vessel For Kitchen Clean in Tamil
இன்றைய பதிவில் எண்ணெய் பாத்திரத்தை ஈசியாக எப்படி பிசுபிசுப்பை போக்குவது என்று தெரிந்துகொள்வோம். பெண்களுக்கு பாத்திரம் தேய்ப்பதே கஷ்டமான வேலை. அதிலே இந்த எண்ணெய் பாத்திரத்தை தேய்ப்பது கஷ்டமான ஒன்றாகும். எண்ணெய் பிசுபிசுப்பை போக்குவதற்கு இரவு முழுவதும் துணி பவடர் போட்டு ஊறவைத்து காலையில் தேய்த்தாலும் அந்த பிசுபிசுப்பு கொஞ்சம் மாறியிருக்கும். ஆனால் எண்ணெய் துர்நாற்றம் அப்படியே தான் இருக்கும். இதை சுலபமாக போக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..
எண்ணெய் பாத்திரத்தில் கவனிக்க வேண்டியவை:
நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் பாத்திரம் எந்த மாதிரி பாத்திரமாக இருக்க வேண்டும் என்று தெரியுமா.? எண்ணெய் பாத்திரம் கனமானதாகவும், சில்வராகவும் இருந்தால் நல்லது. பிளாஷ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தாதீர்கள்.
எண்ணெய் பிசுபிசுப்பை போக்குவதற்கு தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு
- அரிசி மாவு
- துணி பவுடர்
ஸ்டேப்: 1
எண்ணெய் பாத்திரத்தை தண்ணீரில் கழுவ கூடாது. கோதுமை மாவை எடுத்து எண்ணெய் பாத்திரத்தின் உட்புறமும், வெளிப்புறமும் போட வேண்டும். பிறகு பாத்திரத்தை தேயுங்கள். இதிலே பாதி எண்ணெய் பிசுபிசுப்பு வந்துவிடும்.
ஸ்டேப்: 2
பிறகு அரிசி மாவு, துணி பவுடர் சேர்த்து கலக்கவும். பின் எண்ணெய் பாத்திரத்தில் கலந்த துணி பவுடரை சேர்த்து தேய்க்கவும். பிறகு எப்பொழுதும் தேய்க்கும் சோப்பை பயன்படுத்தி தேய்க்கலாம்.
இப்போது பாருங்கள் பாத்திரத்தை எண்ணெய் பிசுபிசுப்பு துளி கூட இருக்காது.
எண்ணெய் பாத்திரத்தில் வரும் துர்நாற்றத்தை போக்குவதற்கு தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு
- சோள மாவு
- கான்பிளவர் மாவு
- பேக்கிங் சோடா
ஸ்டேப்: 1
முதலில் ஒரு கை கோதுமை மாவு, சோளமாவு, கான்பிளவர் மாவு, பேக்கிங் சோடா போன்றவை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.
ஸ்டேப்: 2
பின் எண்ணெய் பாத்திரத்தில் எங்கு கறைகள் உள்ளதோ அந்த இடத்தில் மிக்ஸ் செய்து கலவையை சேர்த்து கைகளால் நல்லா அழுத்தி தேயுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு எப்பொழுதும் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி தேயுங்கள். இப்போது பாருங்கள் புது பாத்திரம் போல் மின்னும்.
ஸ்டேப்: 4
நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் பாத்திரங்கள் பிளைனாக இருந்தால் சுத்தம் செய்வதற்கு ஈசியாக இருக்கும்.
குறிப்பு:
எண்ணெய் பாத்திரம் மட்டுமில்லை எண்ணெய் கறைகள் எங்கு உள்ளதோ அந்த இடங்களிலும் மேல் கூறப்பட்டுள்ள கலவையை போட்டு தேய்த்தாலும் கறைகள் நீங்கி விடும். உதாரணமாக சமையலறையில் உள்ள எண்ணெய் கறை, கேஸ் அடுப்பின் மீது உள்ள கறை மற்றும் விளக்கு ஏற்றும் பாத்திரம் போன்றவற்றிலும் சேர்த்து தேய்த்தாலும் கறைகள் நீங்கி விடும்.
நீங்கள் பாத்திரம் எளிமையாக தேய்ப்பதற்கு உதவும் கம்பி நார் நீடித்து உழைக்க வேண்டுமென்றால் என்ன செய்யணும்னு தெரியுமா.? இந்த டிப்ஸை தெரிந்துகொள்ள கிளிக் செய்து பாருங்கள் ⇒ பாத்திரம் தேய்க்கும் கம்பி நார் நீடித்து உழைக்க இதை ட்ரை பண்ணுங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |