பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் | Required Documents for Deed Registration in Tamil

Required Documents for Deed Registration in Tamil

பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் | Pathira Pathivu Seiya Thevaiyana Aavangal

ஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒருவரின் சொத்து அவருக்கு சொந்தமானது என்பதை சொல்லக்கூடிய அடிப்படை ஆவணம் ஆகும். நாம் பத்திர பதிவை வைத்தே பட்டா மாற்றம் செய்ய முடியும். சொத்துக்களின் உரிமை மாற்றத்திற்கான பத்திர பதிவு தாக்கல் செய்யும்போது சில ஆவணங்கள் தேவைப்படும். அந்த வகையில் இந்த தொகுப்பில் பத்திரத்தை பதிவு செய்ய என்ன மாதிரியான ஆவணங்கள் தேவைப்படும் என்பதை இந்த தொகுப்பில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன

பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

  • தனது நிலத்தை அல்லது சொத்தை விற்பவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட அசல் ஆவணம்.
  • சொத்தில் கட்டுமானம் இருந்தால் வி படிவம் இருக்க வேண்டும், அது பூர்த்தி செய்யபட்டிருக்க வேண்டும்.
  • நிலம் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம். மற்றும் அதற்கான நீதிமன்ற வில்லை
  • சொத்தை விற்பவர் மற்றும் வாங்குபவரின் இரண்டு புகைப்படங்கள். அடையாள அட்டை அசல் மற்றும் நகல்.
  • சாட்சிகளின் புகைப்பட அடையாள அட்டைக்கான ஒரிஜினல் மற்றும் நகல்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • அடையாள அட்டைகளாக நீங்கள் ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

Pathira Pathivu Seiya Thevaiyana in Tamil:

  • ஐந்து லட்சத்திற்கு மேல் சொத்தின் மதிப்பு இருந்தால் அதை வாங்குபவர் மற்றும் பெறுபவர் இருவரின் பான்கார்ட்-ஐ சமர்பிக்க வேண்டும். ஒரு வேலை பான்கார்ட் இல்லையென்றால் அதற்கென ஒரு படிவம் இருக்கிறது அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • கரெக்ட் ஆன அல்லது குறைவான முத்திரைத் தீர்வையை ரொக்கம் அல்லது டிமாண்டு டிராப்டு-ஆக செலுத்தப்படும் நிலையில், இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 41-ன் கீழ் அதற்கான விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
  • சந்தையில் விற்கப்படும் மதிப்புக்கு குறைவான மதிப்பில் ஆவணத்தை நீங்கள் தாக்கல் செய்தால் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47கி(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி அசல் ஆவணத்தை பதிவு அஞ்சலில் அனுப்புவதற்கு உங்களின் சுய முகவரி இடப்பட்ட மூன்று உறைகளை உரிய தபால் தலையுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • உங்களின் சொத்து 20 சென்டிற்கு கீழ் இருந்தால் விவசாய நிலம் மனையாக மாற வாய்ப்புள்ளதாக சார்பதிவாளர் கருதினால் FMB மற்றும் To-po வரைபடமும் தாக்கல் செய்யபட வேண்டும்.
  • பத்திரத்தை நீங்கள் சார்பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ளலாம்.
  • எந்த ஒரு பத்திரம் வாங்கினாலும் முதலில் அதற்குறிய ஆவணங்கள் இருக்கிறதா மற்றும் அணைத்து ஆவணத்தையும் முறையாக படித்த பின்னர் தான் கையொப்பமிட வேண்டும். அதேபோல் நீங்கள் நிலம் அல்லது வீடு வாங்கினாலும் அதனை கவனித்து விசாரித்த பின்னர் தான் வாங்க வேண்டும்.
பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil