பட்டா மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்- Patta Transfer Necessary Documents in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. ஒருவர் நிலம் வைத்துள்ளார்கள் என்றால் அதற்கு கண்டிப்பாக பட்டா வாங்கி வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த இடத்திற்கு அவர் சொந்தக்காரர் என்று சொல்ல முடியும். இது மட்டும் இல்லாமல் வங்கியிலோ அல்லது தனி நபரிடமோ கடன் வாங்க பட்டா அவசியம் தேவைப்படும். அதுபோக யாரிடமாவது உங்கள் நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றாலும் அந்த இடத்திற்கு பட்டா இருக்கிறதா என்று தான் முதலில் கேட்பார்கள். ஆக ஒரு நிலத்தை வாங்குபர்கள் அல்லது வைத்திருப்பவர்கள் அந்த இதற்கு பட்டா வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் வேறொருவருடைய நிலத்தை வாங்குகிறீர்கள் எந்த இடத்திற்கு பட்டா மற்றம் செய்ய வேண்டும் என்றால். அந்த பட்டா மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
குறிப்பு நீங்கள் சமீபத்தில் பட்டா ரிஜிஸ்ட்ரேஷன் செய்துள்ளீர்கள் என்றால் அந்த ரிஜிஸ்டர் ஆஃபீஸிலேயே உங்களுக்கு பட்டா மாற்றம் செய்வதற்க்கான ரிக்யூஸ்ட் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பு வைப்பார்கள்.
அதுமட்டும் இல்லாமல் பட்டா மாற்றம் செய்வதற்க்கான கட்டணத்தையும் நீங்கள் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும்பொழுதே வசூல் செய்துகொள்வார்கள். ஆக இதற்காக நீங்கள் தனியாக பட்டா மாற்றம் செய்வதற்க்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை உங்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்படவில்லை என்றால் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிராம நத்தம் மனைக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி?
பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள் – Patta Transfer Necessary Documents in Tamil:
- நீங்கள் எந்த சொத்தை பட்டா மாற்ற வேண்டுமோ அந்த சொத்தினுடைய ஆவணம், அதாவது சொத்து பாத்திரம் (Registration Document).
- யாருடைய பெயரில் பட்டா மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவர்களுடைய ஆதார் அட்டை.
- பட்டா மாற்றம் செய்ய இருக்கும் சொத்தினுடைய தாய் பத்திரம் அதாவது Parent Document இதனை மூலபத்திரம் என்று அழைப்பார்கள்.
- மேலும் அந்த சொத்தினுடைய கணினி சிட்டா மற்றும் வில்லங்க சான்றிதழ்.
- மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு இ-சேவை மையத்திற்கு செல்லவும். எந்த மாதிரியான இ சேவை மையத்திற்கு செய்யல்லலாம் என்றால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அதாவது கூட்டுறவு பேங்க் என்று சொல்வார்கள் அல்லவா அங்கு உள்ள இ சேவை மையம் அல்லது வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் ஆகிய இ சேவை மையங்களில் ஏதாவது ஒன்றிற்கு நேரடியாக சென்று பட்டா மாற்றம் செய்வதற்க்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- ஒரு ஆவணத்தில் உள்ள சொத்துக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்ப கட்டணமாக 60 ரூபாய் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |