கிராம நத்தம் மனைக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி?

Advertisement

பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி? Patta Vanga Manu Eluthuvathu Eppadi

நண்பர்களுக்கு வணக்கம்.. என்னதான் இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி நன்கு வளர்த்துக்கொண்டு போனாலும். அரசு அலுவலகங்களில் சில விஷயங்களை பெற்ற அல்லது செயல்படுத்த மனு எழுதி தரவேண்டியதாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள பலருக்கு மனு எழுதுவது எப்படி என்றுகூட தெரியாது. அரசு அலுவலகங்களுக்கு நீங்கள் என்று ஏதாவது ஒரு விஷயத்தை பெற வேண்டும் என்றால் அதற்கு மனு எழுதித்தர சொன்னால், அதற்கு நீங்கள் அச்சம்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமது பொதுநலம்.காம் பதிவில் மனு எழுதுவது எப்படி என்று பலவகையான பதிவுகளை பதிவு செய்துள்ளோம். ஆக அவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள். இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் கிராம நத்தம் மனைக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி? என்று தெரிந்துகொள்வோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றால் பதிவை தொடர்ந்து படித்து பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விடுப்பு விண்ணப்பம் எழுதும் முறை

கிராம நத்தம் மனைக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி? – Patta Vanga Manu Eluthuvathu Eppadi

அனுப்புநர்:

k. கதிரவன்
த/பெ. கருப்பையன்,
சிவன்கோயில் தெரு,
கறம்பக்குடி வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

பெறுநர்:

உயர்திரு வட்டாச்சியர் அவர்கள்,
வட்டாச்சியர் அலுவலகம்,
கறம்பக்குடி.

பொருள்:- நத்தம் மனை நிலத்திற்கு பட்டா கோருவது தொடர்பாக.

ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றேன். மேற்படி கிராம புல எண் XXX பரப்பு. XXX-யில் கூரை வீடு கட்ட்டியுள்ளேன். மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எனக்கு பட்டா வழங்குபடி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இணைப்பு:

1) குடும்ப அட்டை
2) வாக்காளர் அடையாள அட்டை
3) வீடு வரி ரசீது
4) ஆதார் அடையாள அட்டை

இப்படிக்கு
K. கதிரவன்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மனு எழுதுவது எப்படி?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement