காவல்துறை புகார் கடிதம் மாதிரி | Police Complaint Letter Format in Tamil

Advertisement

காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி? | Police Complaint Letter in Tamil

Police Complaint Letter Format in Tamil: வணக்கம் நண்பர்களே.. காவல்துறை புகார் கடிதம் எழுதுவது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். நியாயமான ஒரு காரணத்திற்காக காவல் துறையிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குற்ற விசாரணையின் முதல் படியாக கருதப்படும், பாதிக்கப்பட்டவரால் அளிக்கப்படும் புகார் மனு நீதி மன்ற விசாரணையின் போது மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப் புள்ளியாகும். சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல் துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல் நிலையத்தில் பதிவு செய்யலாம். காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனு சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதப்பட்டு இருந்தாலே போதுமானது. புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளியின் வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். சரி இப்பொழுது காவல்துறை புகார் கடிதம் எப்படி எழுத வேண்டும் என்பதை பற்றி கீழ் காண்போம் வாங்க.

காவல்துறை புகார் கடிதம் மாதிரி மனு | Police Complaint Letter Format in Tamil

அனுப்புநர்:

தங்கள் பெயர் மற்றும் உங்கள் வயது,
தகப்பனார் பெயர்
தங்கள் முகவரி
தொலைபேசி எண்:

பெறுநர்:

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,
XXXX காவல் நிலையம்,
XXXX மாவட்டம்.

பொருள்: YYYY [சுமத்தப்படும் குற்றம் குறித்து சுருக்கமாக] நபர் குறித்த புகார் மனு.

மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்,

பெரு மதிப்பிற்குரிய காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம்! மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். குற்றவாளி ஆகிய xxxx என்பவர் [சுமத்தப்படும் குற்றம் குறித்து விரிவாக]. இச்செயல் கடந்த xxxxx தேதியில் நிகழ்ந்தது. குற்றவாளி இச் செய்கையால் எனக்கு [தனது தரப்பில் ஏற்பட்ட பாதிப்பை விவரமாக தெரிவிக்கவும்].

ஆகையால், குற்றவாளி செய்த இத்தகைய செயலுக்கு விசாரணை செய்யுமாறும், அதேபோல் குற்றவாளியால் எனக்கோ என்னைச் சார்ந்த குடும்பத்திற்கோ எவ்வித பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,         
(தங்களது கையொப்பம்)

இடம்: xxxx
நாள்: xxxx

இணைப்பு:
1. [சம்தப்பட்ட ஆவணங்கள் இருப்பின்].

மின்சாரம் புகார் கடிதம் மாதிரி | EB Complaint Letter Format in Tamil

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement