Poppy Seeds in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் கசகசாவை பற்றி சில அற்புதமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே நம் வீட்டில் உள்ள பெண்கள் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளுக்காக இந்த கசகசாவை பயன்படுத்துவார்கள். அதோடு மட்டுமின்றி பெண்கள் தங்களின் முகத்தின் அழகை மேம்படுத்துவதற்கும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இந்த கசகசாவை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் இவ்வளவு பயன்கள் உள்ள இந்த கசகசா எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஆளிவிதை சாப்பிடுபவர்களா நீங்கள்? முதலில் இதை பற்றி தெரிந்துகொண்டு சாப்பிடுங்கள் |
கசகசா என்றால் என்ன:
இந்த கசகசாவை பாப்பி விதைகள் என்று அழைப்பார்கள். இவை அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த செடியாகும். இவை சிறுசெடி இனத்தை சார்ந்தது. இதனுடைய விதைகள் “மருத்துவ அரசன்” என்றும் சொல்லப்படுகிறது. இந்த கசகசா செடியில் வளரும் மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கசகசா விதைகள் எப்படி உருவாகிறது என்றால், அந்த பாப்பி செடிகளின் விதைகளை தாங்கி இருக்கும் பை ஆனது முற்றிய பிறகு அவை முழுவதுமாக காய்ந்த பிறகு அதில் இருந்து கசகசா விதைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த கசகசா பையில் இருக்கும் விதைகள் முழுமையடையதா நிலையில் அந்த பையை கீறி அதில் இருந்து பால் எடுக்கப்படுகின்றன , அந்த பாலை “ஓபியம்” என்றும் அழைக்கப்படுகிறது.
கசகசா விளையும் இடம்:
இந்த கசகசா அதிகமாக பயிரிடப்படும் நாடுகள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கசகசா பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கசகசாவில் இருந்து ஓபியம் எடுத்து அவை போதை பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதால் இவை வளைகுடா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
கசகசா மருத்துவ பயன்கள்:
- கசகசாவை சாப்பிடுவதன் மூலம் பேதி போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
- இந்த கசகசாவில் ஏராளமான சத்துக்களும், அழகு குறிப்புகளும் நிறைந்துள்ளன.
- இவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளான ஊளைச் சதைகளை நீக்கி, சதைகளை இறுக செய்வதற்கும் உதவியாக இருக்கிறது.
- இதனை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் அதிகமாக ஏற்படும் இரத்த போக்குகளை கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.
- நாம் சமைக்கும் உணவுகளான மசாலா சார்ந்த உணவுகளில் கசகசாவை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கொழுப்புகளை குறைத்துவிடும்.
- கசகசாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து முகத்தில் தினமும் தடவி வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து முகத்தை பொலிவு பெற செய்கிறது.
கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள் |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |