ரம்ஜான் தேதி 2022 | Ramzan Eid 2022 in Tamil
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் ரமலான் 2022 தேதி எப்போது என்று தெரிந்துக்கொள்ளுவோம். ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. நோன்பாளிகள் மறுமை நாளில் அதன் வழியாகத்தான் செல்வார்கள். அவர்களை தவிர அந்த வழியில் வேறு யாரும் செல்ல மாட்டார்களாம். மேலும் இந்த ரமலான் மாதத்தில் சமுதாயத்திலுள்ள ஏழைகள் மற்றும் பலரிடமும் பரிவு காட்ட வேண்டிய மாதமாகும். சரி வாங்க இந்த வருடம் ரமலான் தேதி எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்..
ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி? |
ரமலான் 2022 தேதி:
இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் ரமலான் நோன்பானது 30 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. நோன்பானது மே 2 முடிவடைந்து ரம்ஜான் பண்டிகையானது மே 3-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ரமலான் பண்டிகையின் சிறப்பு:
ஒரு மாதம் முழுவதும் நோன்பினை மேற்கொண்டு மே மூன்றாம் தேதி ஈத் கொண்டாட்டம் வருகிறது. இந்த ஈத் (ரமலான்) பண்டிகையன்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கிறது.
அன்றைய சிறப்பு நாளில் இஸ்லாமிய மக்கள் ஒன்றுகூடி சமாதானம் சொல்லி உற்றார் உறவினர்களோடு சேர்ந்து அமர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள்.
ரமலான் மாத முக்கியத்துவம்:
இஸ்லாமிய மதத்தினர் நாள்காட்டியின் படி ரமலான் மாதம் முழுவதும் முஸ்லீம் இனத்தவர்களுக்கு இது புனித மாதமாக விளங்குகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் இறைவன் அல்லா அவர்களிடம் முழுமையான பக்தியை கடைப்பிடித்து நோன்பினையும், தொழுகை முறைகளை பின்பற்ற வேண்டும்.
ருசியான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி தெரியுமா? |
ரமலான் பண்டிகையின் உணவு முறை:
பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகை. ரமலான் மாதத்தில் இப்தார் அன்று சமைத்து அனைவரும் கூட்டமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் அந்த நாளினை கழிப்பார்கள்.
இஸ்லாமிய இனத்தவர்கள் அன்றைய மாதத்தில் ஷீர் குருமாவினை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வார்கள். இந்த ஷீர் குர்மாவானது சேமியா, போிச்சம்பழம், குங்குமப் பூ, பால் மற்றும் உலா்ந்த பழங்கள் போன்றவைகளால் தயார் செய்யப்படுகிறது.
ரமலான் பண்டிகையின் போது பிரதான உணவாக இருப்பது ஹலீம் உணவாகும். ஹலீம் கஞ்சியானது விறகு அடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் பொிய கொப்பரைகளில், கோதுமை, பருப்புகள் மற்றும் இறைச்சி ஆகியவை கலந்து தயாாிக்கப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |