ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Reason for X Symbol In End Of The Train in Tamil

Reason for X Symbol In End Of The Train

தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் சிறுவயதிலிருந்து இரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நம்மில் பலரும் இரயிலின் முன் புறத்தை மட்டுமே பார்த்திருப்பார்கள். இரயிலின் பின் புறத்தை அனைவரும் பார்த்திருப்பார்களா என்றால் அது கேள்விக்குறி தான். அதுபோல இரயிலின் பின் புறத்தில் × என்ற குறியீடு இருக்கும். அது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா..? பதில் தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.

ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா?

Reason for X Symbol In End Of The Train in Tamil: 

Reason for X Symbol In End Of The Train

ரயிலின் பின் புறத்தில் அதாவது கடைசி பெட்டியின் பின்னாடி இருக்கும் இந்த × குறியீட்டை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அந்த குறியீட்டை பார்த்தவர்களுக்கு மனதில் பல கேள்விகள் எழுந்திருக்கும். சிலர் அதற்கான காரணத்தை தேடியிருப்பார்கள். அப்படி காரணத்தை தேடிய உங்களுக்காக தான் இந்த பதிவு..!

இந்த குறியீடு எதற்கு என்றால், இரயிலில் எந்த பிரச்சனையும் அல்லது எந்த பழுதும் இல்லை என்பதை குறிப்பதற்காக தான் அந்த X குறியீடு போடப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் அந்த X குறியீடு மஞ்சள் நிறத்தில் தான் போடப்பட்டிருக்கும்.

ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

அதுமட்டுமில்லாமல்,  இரவு நேரங்களில் ஏதாவது சிக்னல் பிரச்சனை என்றால் ஒரே தண்டவாளத்தில் 2 இரயில்கள் போகும் நிலை ஏற்படும். அந்த நேரத்தில் பின்னாடி வரும் இரயிலின் எஞ்சின் டிரைவருக்கு முன்னாடி ஒரு இரயில் செல்கிறது என்பதை தெரிவிப்பதற்காக தான் இந்த குறியீடு அனைத்து இரயில் பெட்டிகளிலும்  போடப்பட்டிருக்கிறது.  

மேலும் அந்த குறியீட்டு கீழேயே ஒரு சிவப்பு நிற லைட் இருக்கும். அந்த லைட்டும் பின்னாடி வரும் ரயிலுக்கு முன் இரயில் செல்கிறது என்பதை தெரிவிப்பதற்காகத் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சிவப்பு நிற லைட் இரவு நேரங்களில் 5 வினாடிக்கு ஒரு முறை விட்டு விட்டு எரியும்.

இந்த காரணத்திற்காக தான் அனைத்து இரயில் பெட்டிகளிலும் இந்த × குறியீடு போடப்பட்டிருக்கிறது.

ஆம்புலன்ஸில் ஏன் ஆங்கில வார்த்தை தலைகீழாக எழுதிருக்கிறார்கள் அதற்கு காரணம் என்ன?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil