எளிய பழமொழிகள் | Simple Proverbs in English and Tamil..!
நாம் அனைவரும் உபயோகப்படுத்தக்கூடிய வார்த்தைகளில் பழமொழியும் ஒன்று. நம் வீட்டில் உள்ளவர்களும் சரி மற்றவர்களும் சரி அதிகமாக பேசும் போது பழமொழியினை பயன்படுத்துவார்கள். அத்தகைய பழமொழியில் எண்ணற்ற பழமொழிகள் உள்ளது. ஒவ்வொரு பழமொழிக்கும் தனித்தனி அர்த்தங்கள் மற்றும் விளக்கம் உள்ளது. இந்த பழமொழி எல்லாம் நாம் பள்ளி படிக்கும் காலத்தில் படித்து இருப்போம். அதன் பின்பு அதனை பற்றி பேசுவதோடு சரி அதற்கான அர்த்தங்களை பற்றி தான் பெரிதாக படிப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் தமிழில் உள்ள எளிமையான தமிழ் பழமொழிகளை பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நட்பு பற்றிய பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
எளிய பழமொழிகள்:
தமிழில் பழமொழி | ஆங்கிலத்தில் பழமொழி |
கடந்த காலம் திரும்ப வராது | Tomorrow never comes |
உத்தியோகம் புருஷலட்சணம் | Business is the salt of life |
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். | There is a silver lining in every cloud |
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை | Don’t lock the stable door after the horse has been stolen |
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் | The old fox is caught at last |
பணம் பாதளம் வரைக்கும் பாயும் | Money makes many things |
ஆபத்துக்கு பாவம் இல்லை | Anything is fair in love and war |
அளவறிந்த நடவடிக்கை சிறப்பாக வெற்றிபெறும் | Moderate measure succeeds best |
அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை | Measure is treasure |
அறியாமையே வாழ்க்கையின் அமைதி | Ignorance is the peace of life |
Simple Proverbs in English and Tamil:
Proverbs in Tamil | Proverbs in English |
மனதின் இருளே அறியாமை | Ignorance is the night of the mind |
அறியும் ஆவல் | Inquisitiveness |
அறிவுரை தேவைப்படும் பொழுதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும் | Advice when most needed is least heeded |
நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது | It is hard to follow good advice than to give it |
முற்றிய பிறகு பெற்ற அறிவுரை தந்திடும் வேதனை | Counsel is irksome when the matter is past remedy |
கல்வியில்லாத அனுபவம் அனுபவம் இல்லாத கல்வியைவிட மேல் | Experience without learning is better than learning without experience |
மற்றவர்கள் தவறுகண்டு தான் கற்பதே நல்லது | It is good to learn at other men cost |
அறிவுரை போல இலவசம் வேறெது? | Nothing is given so free as advice |
நிறைகுடம் தழும்பாது | A rolling stone gathers no moss |
பாம்பென்றால் படையும் நடுங்கும் | A snake could make an army panic |
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்:
பழமொழிகள் தமிழில் | பழமொழிகள் ஆங்கிலத்தில் |
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் | A good horse often needs a good spur |
தானமாக வந்த மாட்டை பல்லை பிடித்து பார்க்காதே | Don’t look a gift horse in the mouth |
கெடுவான் கேடு நினைப்பான் | Frost and fraud have foul ends |
பேராசை பெருநட்டம் | The greater the ambition the greater the low |
முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி | The early bird catches the worm |
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் | Seek and ye shall find |
புத்திமான் பலவான் ஆவான் | Knowledge is power |
சாது மிரண்டால் காடு கொள்ளாது | The anger of a good man is the hardest to bear |
ஒருவனது நட்டம் மற்றவனது இலாபம் | One mans loss is another mans gain |
அமைதியாய் இரு விரும்பியதை அடைவாய் | Be still and have thy will |
10 பழமொழிகள் தமிழ்:
Proverbs in Tamil | Proverbs in English |
யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்ட கதை | Asking for limestone from one who is travelling on an elephant |
ஆழம் தெரியாமல் காலை விடாதே | Look before leap |
எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ? | Can you ask price for your ghee before buying buffalo? |
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து | A contented mind is a continual feast |
மகிழ்ச்சியே மாமருந்து | Joy is a great medicine |
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் | Its like wolf cried when the sheep got drenched in rain |
உண்டு பார்த்தால்தான் உணவின் சுவை தெரியும் | The proof of op the pudding is in the eating |
அங்காடிக்காரியை பாடச்சொன்னால், வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள் | If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim Onions, Curry leaves |
ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா? | Will not be who has waited till the food is cooked, also wait till it cools? |
ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் உலகத்தில் போர் இல்லை | An army marches on its stomach |
50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்
பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலம்:
பழமொழி தமிழ் | பழமொழி ஆங்கிலம் |
திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை | No man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessed |
ஏற்ற இறக்கம் வாழ்க்கையில் சகஜம்/ ஏற்றம் உண்டு என்றால் இறக்கமும் உண்டு | Every tide has its ebb |
பசி ஆறினால் கோபம் மாறும் | When meat is in anger is out |
அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு | A cow eats moving, a house eats standing |
மதில் மேல் பூனை போல | Like a cat standing on the wall |
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் | Laughter is the best medicine |
பசி அறியாது ருசி | All things require skill but an appstite |
நெருப்பின்றி புகையாது | No smoke without fire |
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது | The cat that has got fire burns will never go near the kitchen |
நல்ல உதாரணமே சிறந்த புத்திமதி | A good example is the best sermon |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |