விவாத தலைப்புகள் | Debate Topics
வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாகிய உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் உங்களுக்கு தேவையான 50 விதமான விவாத தலைப்புக்களை பற்றி பார்க்கப்போகிறோம். இந்த பதிவின் மூலம் 50 விவாத தலைப்புகளின் பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள்…
தலைப்புகள் பட்டியல் | Tamil Debate Topics:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சில விவாத தலைப்புகள் உள்ளன. பேச்சுப் போட்டி அல்லது கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ள தலைப்புகளை தேடுகிறீர்களா..? இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள் தெரியுமா |
சுற்றுசூழல் சம்பந்தப்பட்ட தலைப்புகள்:
- எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தின் பங்கு என்ன?
- பிளாஸ்டிக் பைகளை எதற்காக தடை செய்யவேண்டும்? காரணம் என்ன?
- காலநிலை மாற்றத்தை மாற்ற முடியுமா?
- சுற்றுசூழல் மாசுபடுவதை எப்படி தவிர்ப்பது?
- உயிரியல் பூங்காக்களை தடை செய்யவேண்டுமா?
- சுற்றுசூழலை எப்படி பாதுகாப்பது?
- இன்றைய இளைஞர்கள் விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமா?
- விவசாயம் இல்லையென்றால் மக்களின் நிலை என்ன?
- காடுகள் அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
- வளரும் குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியபடுத்த வேண்டும்?
பெற்றோர் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தலைப்புக்கள்:
- குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு பெற்றோர்களின் ஆதரவு என்ன?
- பெண்குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும்?
- குழந்தைகளிடம் பெற்றோர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது அவசியமா?
- குழந்தைகள் வருங்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டுமா?
- குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிப்பில் வளர்க்க வேண்டுமா? காரணம் என்ன?
- குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தீர்மானிப்பது நல்லதா கெட்டதா?
- பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவதற்கு காரணம் என்ன?
- பெற்றோர்களின் அனுமதியின்றி பிள்ளைகள் திருமணம் செய்துகொள்வது சரியா? தவறா?
- பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டுமா?
- பெற்றோர்கள் பிள்ளைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பிட் காயின் பற்றி தெரியுமா உங்களுக்கு |
பொது தலைப்புகள்:
- எதிர்காலத்தில் அனைவருக்கும் உயர்கல்வி அவசியமா?
- தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு உங்களின் கருத்து என்ன?
- கருக்கலைப்பு என்பது கொலையா அல்லது தற்கொலையா?
- இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன?
- பள்ளிகளில் மொபைல் போன்கள் பயன்படுத்த கூடாது என்பது நல்லதா? கெட்டதா?
- சமுதாயம் எப்படி இருக்க வேண்டும். இதில் உங்கள் கருத்து என்ன?
- பணக்காரர்கள் ஏழைகளை விட அதிகளவு வரி செலுத்த வேண்டுமா?
- விவசாயம் பற்றி உங்களின் கருத்து என்ன?
- ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகளா? உங்களின் கருத்து என்ன?
- இளம் வயது திருமணம் உங்கள் கருத்து என்ன?
- சமுதாயம் பற்றி உங்களின் கருத்து என்ன?
- போதை பொருட்களை தடை செய்ய வேண்டும்? உங்கள் கருத்து என்ன?
- நல்ல சமூகம் உருவாக என்ன செய்ய வேண்டும்?
- சுகாதாரம் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன?
- அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும்?
கல்வி சம்பந்தப்பட்ட தலைப்புகள்:
- உயர்கல்வி என்பது அவசியமா? இல்லையா?
- கல்வி பற்றி உங்களின் கருத்து என்ன?
- அனைத்து மாணவர்களும் எல்லா மொழிகளையும் கற்பது அவசியமா?
- பள்ளியில் கற்பிக்கும் கல்வியை விட வீட்டு கல்வி சிறந்ததா?
- அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி எது சிறந்தது?
- மாணவர்கள் கட்டாயம் பள்ளி சீருடை அணியவேண்டுமா?
- பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் கூறும் நல்ல கருத்துக்கள் என்ன?
- கல்லூரி படிப்பு அனைவர்க்கும் இலவசமாக இருக்க வேண்டும். இதில் உங்கள் கருத்து என்ன?
- கல்வியை தனியார்மயமாக்க வேண்டுமா? காரணம் என்ன?
- பள்ளிகளில் மதம் கற்பிக்கபடுவது சரியா? தவறா?
- மாணவர்களுக்கு மதுவிலக்கு பற்றி தெரியப்படுத்த வேண்டும்?
- பள்ளிகளில் துரித உணவுகளை தடை செய்யவேண்டும்?
- பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன?
- ஒரு நல்ல வேலை பெறுவதற்கு கல்லூரி பட்டம் அவசியமா?
- ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |