தமிழ் எழுத்துக்கள் உச்சரிப்பு

Advertisement

உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு | Tamil Eluthukkal Ucharippu

எழுத்துக்கள் பிறப்பதற்கான அடிப்படைக் காரணமாக இருப்பது ஒளியணுக்கள் தான். தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப்பையினுள் எழும் காற்றானது மார்பு , கழுத்து, தலை, மூக்கு, அண்ணம் ஆகியவற்றை பொருந்தி உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாக பிறக்கின்றன. அந்த வகையில்  எழுத்துக்களின் பிறப்பு இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் தமிழ் எழுத்துக்கள் உச்சரிப்பு இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

எழுத்துக்களின் பிறப்பு எத்தனை வகைப்படும்:

எழுத்துக்களின் பிறப்பு இரண்டு வகைப்படும் அவை இடப்பிறப்பு மற்றொன்று முயற்சிப் பிறப்பு. தமிழ் எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றை இடப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் வேறுபாட்டினால் ஒலிப்பதை முயற்சி பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.

உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை:

உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையை பின் வருமாறு வகைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

* உதடுகளை அடிப்படியாக வைத்து உயிர் எழுத்துக்கள் உச்சரிப்பு முறைகளை பின்வருமாறு 2 ஆக வகைப்படுத்தலாம். அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

இதழ் குவிந்த உயிர் எழுத்துக்கள்:

உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துக்கள் உச்சரிக்கும் போது இதழ் இரண்டையும் குவித்து உச்சரிக்கிறோம். ஆக இவை இதழ் குவிந்த உயிர் எழுத்துக்கள் ஆகும்.

இதழ் குவியா உயிர் எழுத்துக்கள்:

அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் உச்சரிக்கும் போது இதழ்களை குவியாமல் உச்சரிக்கிறோம். ஆக இவை இதழ் குவியா உயிர் எழுத்துக்கள் ஆகும்.

* நாக்கின் ஏற்படும் அதிர்வுகளின் அடிப்படியில் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையினை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.

1. முன் உயிர்:

இ, ஈ, எ, ஏ இந்த உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கின் முன்பகுதி விறைப்படைகின்றன அதனால் இவற்றை முன் உயிர் என்பார்கள்.

2 .பின் உயிர்:

உ, ஊ, ஒ, ஓ இந்த உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கின் நடுப்பகுதி  விறைப்படைகின்றன அதனால் இவற்றை பின் உயிர் என்பார்கள்.

3. இடை உயிர்:

அ, ஆ இந்த உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கின் பின் பகுதி விறைப்படைகின்றன அதனால் இவற்றை இடை  உயிர் என்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

* நாக்கின் அசைவினை அடிப்படியாக கொண்டு உயிர் எழுத்துக்கள் மூன்று வகையாக உச்சரிக்கப்படுகின்றன. அதை இப்பொழுது பார்க்கலாம்.

மேல் உயிர்:

இ, ஈ, உ, ஊ இந்த உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கு மேல் நோக்கி எழும் ஆக இவை மேல் உயிர் என அழைக்கப்படுகிறது.

கீழ் யார்:

அ, ஆ இந்த உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கு கீழ் நோக்கி எழும் ஆக இவை கீழ் உயிர் என அழைக்கப்படுகிறது.

நடு யார்:

எ, ஏ, ஒ, ஓ ஆகிய உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கானது மேல் நோக்கி எழாமலும், கீழ் நோக்கி தாளாமலும் நடுநிலையில் நிற்கிறது இதனால் இவற்றை நடு உயிர் என்று அழைப்பார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement