ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை | Aasiriyar Thinam Katturai in Tamil | Teachers Day Speech in Tamil
Teachers Day Speech in Tamil: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை தான் நாம் அனைவரும் வருடா வருடம் செப்டம்பர் 05-ஆம் தேதியன்று மிக விமர்சையாக மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் தினத்தினை கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது வாழ்நாள் முழுவதும் நல்ல ஆசிரியராக மாணவர்கள் அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக விளங்கியவர். ஆசிரியர்கள் என்றாலே ஒழுக்கம், பண்பு நலன்களில், ஊக்குவிப்பு, அதிக தன்னம்பிக்கை, எதிலும் விடாமுயற்சி இன்னும் பல திறமைகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நேர்மையான வழிகாட்டிகள். பல நல்வழி நன்னெறிகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியை பெருமக்களுக்கு நன்றி கூறும் வகையில் செப்டம்பர் 05 அன்று ஆசிரியர் தினம் தவறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களையும் நல்வழிக்கு கொண்டு போவது ஆசிரியர்களால் மட்டுமே முடியும். ஆசிரியர் திருநாளை போற்றும் வகையில் இந்த பதிவில் ஆசிரியர் பணி கட்டுரையை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் Images-ஐ டவுன்லோடு செய்ய | Teachers Day Wishes in Tamil |
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பு | டாக்டர் ராதாகிருஷ்ணன் கட்டுரை:
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 05 அன்று திருத்தணி மாவட்டத்தின் பக்கத்திலுள்ள சர்வபள்ளி எனும் இடத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆவர்.
படிப்பு:
ராதாகிருஷ்ணன் இளங்கலை துறையில் தத்துவத்தை முதல் பாட பகுதியாக தேர்வு செய்து பி.ஏ (BA) பட்டத்தை பெற்றார். அதனை அடுத்து முதுகலை துறையில் எம். ஏ (MA) பட்டத்தினையும் பெற்றார்.
ஆசிரிய பணி | ஆசிரியர் பற்றிய கட்டுரை:
ஆசிரியர் பணி கட்டுரை: சென்னை மாவட்டத்தில் அமைவிடம் பெற்ற பிரிசிடென்சி கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய முதல் ஆசிரியர் பணியினை தொடங்கினார். இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றவர்களின் வர்ணனை கவிதைகளையும் கற்றுக்கொண்டார்.
ராதாகிருஷ்ணன் இது மட்டுமல்லாமல், பல்வேறு மத வகைகளில் புத்த மத மற்றும் ஜெயின் மதத்தில் உள்ள தத்துவம், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றவர்கள் எழுதிய தத்துவத்தினையும் கற்று தேர்ந்து, அதனுடைய சிறப்பினை நமது நாட்டிற்கு வெளிப்படுத்தியவர்.
ராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக 1918-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராக 1921-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். 1923-ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” எனும் நூல் வெளியிடப்பட்டது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1931-ஆம் ஆண்டு, ஆந்திர மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து 1939-ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார். அடுத்து 1946-ல், யுனெஸ்கோவின் தூதுவராக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய நாடு ஆங்கிலேயரிடம் சுதந்திரம் அடைந்த பிறகு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, 1948-ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராக வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் அனைத்து தேவைகளை நிறைவேற்ற, இந்திய நாட்டிற்கு சிறப்பான கல்வித் திட்டத்தை கொண்டு வர, ராதாகிருஷ்ணனின் ஆலோசனைகள் மிகவும் உதவிகரமாக இருந்தது.
ஆசிரியர் பற்றிய கட்டுரைகளை தெரிந்து கொள்வோமா..? |
உலக ஆசிரியர் தின வரலாறு:
உலகத்தின் பல்வேறு நாடுகளில், ஒவ்வொரு தினங்களில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். கல்வி சம்பந்தமாக மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுப்படுத்தும் வகையில் செப்டம்பர் 05 அன்று ஆசிரியர் தினம் வருடா வருடம் கொண்டாப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணி கட்டுரை:
ஆசிரியர் பற்றிய பேச்சு: மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பது ஆசிரியர் பணி இல்லை; அவர்களுக்கு ஒழுக்கத்தில் எப்படி சிறந்து விளங்குவது, அடுத்தவர்களிடம் எப்படி பழக வேண்டும், ஆன்மீக வழிபாடுகளில் எப்படி பங்கேற்க வேண்டும், பொது அறிவு சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் மாணவ செல்வங்களுக்கு தெளிவாக எடுத்து கூறுவதே ஒவ்வொரு ஆசிரியை பெருமக்களுக்கும் அது உன்னத பணியாகும். அப்படிப்பட்ட ஆசிரியர் பணி எனும் தெய்வீகப் பணியை மாணவர்களுக்கு கற்று தர, மனதில் தன்னலம் இல்லாமல், தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் தொழிலை வெறுப்புடன் இல்லாமல் நேசிக்கக்கூடியவர்களாக இருப்பவர் மட்டுமே உண்மையான ஆசிரியர்களுக்கு சமமாவார்கள்.
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை | ஆசிரியர் தினம் கட்டுரை:
டாக்டர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாழ்நாள் காலம் முழுவதும் தாம் செய்யும் ஆசிரியர் பணியை புனிதமாக எண்ணி மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, ஒரு மாபெரும் தத்துவ மேதையாக உலகம் முழுவதும் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 05-ஆம் நாளினை, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் ஆசிரியர் தினமாகக் இன்றும் அனைத்து பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினம் எப்போது:
ஆசிரியர் தினம் கட்டுரை: வருடா வருடம் செப்டம்பர் 05-ஆம் நாள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளினை உலக ஆசிரியர் தினமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது:
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துரைக்க பல தலைப்புகளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவ செல்வங்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். மேலும் அன்றைய தினத்தில் ஆசிரியர் (ஆசிரியர் பணி கட்டுரை) பணியில் சிறந்து பணியாற்றுபவர்களை புகழ்விக்கும் வகையில் தமிழக அரசால் அவர்களுக்கு விருதினை வழங்கி பெருமைப்படுத்தும்.
மாணவர்களும் தங்களுக்கு பிடித்த ஆசிரிய பெருமக்களுக்கு அவர்களால் முடிந்த பரிசுகளை வழங்குவார்கள். மேலும், பயிலும் மாணவர்களுக்கு தேவையான உடல் ஆற்றல், ஊக்குவிப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களை நல்ல முறையில் பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதமான பணியே ஆசிரியர் பணி.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |