Teacher Quotes in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதனை நமக்கு கற்று தரும் ஆசிரியரின் குணநலன் மற்றும் அவர் மாணவர்களுக்கு பாடங்களை கற்று தரும் விதமும் மிகவும் முக்கியம். அதாவது ஒரு ஆசிரியர் தான் ஒரு மனிதனை மனிதனாக மாற்றும் பொறுப்பில் உள்ளார். அதனால் அவர் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். அதாவது ஒரு ஆசிரியர் மாணவ மாணவிகளுக்கு கல்வியை மட்டுமில்லாமல் ஒழுக்கம் மற்றும் நல்ல பண்புகளை கற்று தருகிறார். அப்படிப்பட்ட பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள ஆசிரியர் பற்றிய சில கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளில் உங்களின் மனம் கவர்ந்த கவிதைகளை உங்களின் ஆசிரியர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Teacher Quotes:
பாலைவனமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றியது.
என் ஆசிரியர்..!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!
Best Teacher Quotes in Tamil:
ஒரு குழந்தையை
பத்திரமாய் பார்த்து வளர்ப்பது
தாயின் கடமை
சிற்பமாக செதுக்கி எடுப்பது
ஆசிரியரின் கடமை..!
Teacher Kavithai in Tamil:
பிரசவ அறையில்
பிறப்புறப்பைக் கிழித்து
உலகம் தொட்டேன்!
அன்று தொடங்கியது பாடம்!
இன்று வரை பாடம் ஒன்று தான்!
வாழ்க்கை! படிப்பிப்பவரோ உருவத்தால்
மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! தவழப் பழக்கி
சிரிக்கப் பழக்கி
நடக்கப் பழகி
வார்த்தை மெல்ல அசை போட வைத்து…
என் முதல் ஆசான்கள் ஒப்படைத்தார்கள்…
என் இரண்டாம் பெற்றோரிடம்!
வாழ்வில் வரும் முதல் ஏதும்
மறப்பதில்லை எளிதில்!
வயது சிறிதென்றாலும் இன்னும்
பசுமையாகத் தான் உள்ளது!
பள்ளி நினைவுகள்!
அகவை ஐந்தில் தொடங்கியது! சுய செதுக்கல்!
ஆசான் எனும் கைஉளி கொண்டு!
அம்மையப்பன் உயிர் கொடுத்தார் என்றால், உயிரெழுத்து தந்தது
என் ஆசான்! அகரம் சொல்லி ஏற்றுவித்தார்! இன்று நான் சிகரமாய்!
ஒரு கருவை கருவறையில்
தாய் சுமந்தாள்! பல உருவை அதன் கனவை
வகுப்பறையில் சுமப்பவர் தான்
என் ஆசான்
களர் நிலத்தை தோண்டி எடுத்து
கலை நிலமாய் உழுதவர்தான்
என் ஆசான்!
பிரம்பு பட்டு சிவந்த கரம்,
உதவி செய்து சிவக்கிறது! அன்று கற்பித்த ஒழுக்கத்தால்!
எத்தனையோ வசை பாடி இருக்கிறேன்!
இன்று நினைத்தால் கண்களில் நீர் துளிர்க்கிறது! வாழ்க்கைப் பாடத்தில்
வான் ஏற்றிவிட்டு, வெறும் வரப்பாக நின்று
வேடிக்கை பார்ப்பவர் தான் என் ஆசான்!
Quotes for Teacher in Tamil:
நீங்கள் எங்கள் ஆசிரியர் மட்டுமல்ல,
நண்பரும் வழிகாட்டியும் கூட…
நீங்கள் எங்களுக்கு ஒரு
சிறந்த மாதிரியாக இருக்கிறீர்கள்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
Best Teacher Kavithai in Tamil:
தமிழ் ஆசிரியர் பற்றிய கவிதை:
கரும்பலகையின் மீது
வெண்ணிற எழுத்துக்களால்
வண்ணமயமான வாழ்க்கையை
எங்களுக்கு அளித்த வாழும் தெய்வம்
ஆசிரியர் தினம் பேச்சு போட்டி கட்டுரை |
ஆசிரியர் தின கவிதைகள் |
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் |
கணித ஆசிரியர் பற்றிய கவிதை:
இன்பத்தை கூட்டி..
துன்பத்தை கழித்து..
அன்பினை பெருக்கி..
வன்மையை வகுத்த
கணித ஆசான் இவர்
ஆசிரியர் பற்றிய கவிதை:
எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !
உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன் !
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்
Miss You Teacher Quotes in tamil:
ஒரே நேரத்தில் ஒரு சிறந்த கல்வியாளராகவும், நண்பராகவும் இருந்ததற்கு நன்றி
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |