தவிலுக்கு எந்த ஊர்காரர் பிரசித்தம்

Thavilukku Intha Oor Prasitham Name

தவிலுக்கு இந்த ஊர் பிரசித்தம் தெரியுமா? | Thavilukku Intha Oor Prasitham Name

நண்பர்களுக்கு வணக்கம் தவில் என்பது தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில் ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார்.

தவிலுக்கு என்ற ஊர்காரர் பிரசித்தம் தெரியுமா?

விடை: தஞ்சாவூர்.

தஞ்சாவூர் சிறப்பு:

பொதுவாக தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது.

தஞ்சாவூர் பழங்கால ஓவியங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு புகழ் பெற்றதாகும். இங்கு பலாமரத்தில் செய்யப்படும் வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களின் விருப்பத்திற்குரியதாகும்.

மேலும் தஞ்சாவூர் என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை லையாட்டி பொம்மை மூன்று பாகங்களாக உள்ளது. காற்றில் பொம்மை ஆடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். விலையும் மலிவாக கிடைப்பதால் தஞ்சாவூர் வரும் அனைவரும் இந்த பொம்மையை வாங்காமல் செல்வதில்லை.

அதேபோல் தஞ்சாவூர் பெரிய கோவிலும் மிக சிறந்த சுற்றுலா இடமாக கருதப்படுகிறது. இந்த கோவிலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இக்கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும்.

மேலும் காபி என்றாலே கும்பகோணம் டிகிரி காபி நினைவில் வந்து நாவில் நீர் ஊற செய்யும். காபி கொட்டைகளை அரைத்து தாமிரத்தால் ஆன பில்டர்களில் வடிகட்டி டிகாஷன் தயாரித்து சுத்தமான பசும்பால் கலந்து காபி தயாரிக்கப்படுகிறது. தாமிரத்தால் ஆன பில்டர்களை பயன்படுத்துவதால் சுவை கூடுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com