வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அன்புடைமை திருக்குறள் விளக்கம் | Thirukkural Anbudaimai

Updated On: August 7, 2023 12:18 PM
Follow Us:
Thirukkural Anbudaimai
---Advertisement---
Advertisement

திருக்குறள் அன்புடைமை குறள் விளக்கம் | Anbudaimai Thirukkural

Anbudaimai Thirukural 10: வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் திருக்குறளில் உள்ள அன்புடைமை அதிகாரத்தை தெரிந்து கொள்வோம். ஒருவரின் மனதில் அன்பும், பாசமும் இருந்தால் அவரால் எந்த உயிர்களுக்கும் தீமை நேராது, தனக்கென்று யோசிக்காமல் பிறருக்காக வாழும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இது போன்று அன்பானவர்களின் சிறப்புகளை திருவள்ளுவர் தமது குறள் மூலம் எடுத்துரைக்கிறார். சரி வாங்க எட்டாம் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

திருக்குறள் அன்புடைமை பொருள்:

குறள்: 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம்:

உள்ளத்தில் இருக்கும் அன்பை யாராலும் தாழ்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவர் துன்பப்படுவதை கண்டால் கண்ணீர் துளி வாயிலாக அன்பு வெளிப்பட்டு விடும்.

குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்:

அன்பில்லாத மனதை உடையவர் எல்லாமே தனக்கு என்று நினைத்து வாழ்வார், அன்புடையவரோ தம் உடல், பொருள் அனைத்தும் மற்றவர்களுக்கு உரியது என்று எண்ணி வாழ்வார்கள்.

குறள்: 73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

விளக்கம்:

உயிரும், உடலும் போல் அன்பும், செயலும் இணைத்திருப்பதே உயர்ந்த பொருத்தம் ஆகும்.

Thirukkural Anbudaimai:

குறள்: 74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்:

அன்பு பிறரிடம் பற்று எனும் பண்பை உருவாக்கும், அந்த பண்பு நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

குறள்: 75

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

விளக்கம்:

இந்த உலகத்தில் இன்புற்று வாழ்பவர்களுக்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக வாழ்வதனாலே என்று சொல்லலாம்.

குறள்: 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்:

நல்ல செயல்களுக்கு மட்டும் அன்பு துணையாக இருக்கும் என்று உரைப்பவர்கள், வீர செயல்களுக்கும் அன்பு துணையாக இருக்கிறது என்பதை அறியாதவர்கள்.

Anbudaimai Thirukkural:

குறள்: 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

விளக்கம்:

எலும்பில்லாத உடம்போடு வாழும் புழு, பூச்சிகளை வெயில் வாட்டுவது போல, அறம் எதுவென தெரிந்தும் அதை கடைப்பிடிக்காத அன்பில்லாதவனை அவனது மனசாட்சியே வாட்டி வதைக்கும்.

குறள்: 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

விளக்கம்:

நெஞ்சத்தில் அன்பு இல்லாமல் வாழும் மக்களின் வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

அன்புடைமை திருக்குறள் விளக்கம்:

குறள்: 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

விளக்கம்:

அன்பு எனும் அகஉறுப்பு இல்லாதவர்களுக்கு, புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

குறள்: 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம்:

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நிலை அடைந்த உடம்பாகும், அன்பு மட்டும் இல்லையென்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின் மேல் தோலை போர்த்தியது போன்றது.

தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்
திருக்குறள் இயல்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now