பொதுநலம்.காம் வந்ததுக்கு நன்றி.. விடுகதை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விடுகதை கேட்கவும், அதற்கான விடைகளை யோசித்து சொல்வதிலும் அதிக ஆர்வமாக இருப்பார்கள். இவ்வாறு மூளைக்கு வேலை குடுப்பதன் மூலம் நமக்கு சுயமாக யோசிக்கும் திறனானது அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கல்வி கற்கும் மழலை குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எளிதான சில விடுகதை புதிர்களை குழந்தைகளிடம் கேட்பார்கள். சரி வாங்க யோசிக்கும் திறனை அதிகரிக்கவும், நமது மூளைக்கு வேலை கொடுக்கவும் இங்கு விடுகதை விளையாட்டு விடைகள் சிலவற்றை காணலாம் வாங்க..
விடுகதை விளையாட்டு விடைகள்:
தமிழ் விடுகதை வினாக்கள்
விடுகதை விளையாட்டு விடைகள்
1. உடம்பில்லா ஒருத்தன் பத்து சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?
வெங்காயம்
2. என்னை கீழே போட்டால் நான் உடைந்துவிடுவேன் என்னை பார்த்து சிரித்தால் நான் உங்களை பார்த்து சிரிப்பேன் அவன் யார்?
கண்ணாடி
3. மலைகள் இருக்கு ஆனால் கற்கள் இல்லை, ஆறுகள் இருக்கு ஆனால் தண்ணீர் இல்லை, நகரம் இருக்கு ஆனால் கட்டடம் இல்லை நான் யார்?
வரைபடம் (Map)
4. முடியும் இல்லாத, முகத்திலும் இல்லாத தாடி அது எது?
காத்தாடி
5. எட்டு பேர் நாங்க எங்க தலைவர காப்பாற்ற முன்னாடி போவோம் பின்னாடி வரமாட்டோம் நாங்க யார்?
செஸ் பான் (Chess Pawn)
6. அறைகள் உண்டு ஆனால் வீடு அல்ல, சித்திரமும் அல்ல, காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு ஆனால் கோட்டையும் அல்ல அது என்ன?
தேன் கூடு
7. உலகம் முழுவதும் பறந்து செல்வான் ஆனால் ஒரு மூலையை விட்டு நகர மாட்டான் அவன் யார்?
ஸ்டாம்ப் (Stamp)
8. வானத்தில் பறக்கும் பறவை, ஊரையே சுமக்கும் பறவை அது என்ன?
விமானம்
9. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் இன்னொருவன் ஓடுவான் அவன் யார்?
கடிகாரம்
10. ஓய்வு எடுக்காமல் இயங்கும், ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்க முடியாது அது என்ன?
இதயம்
Tricky Riddles With Answers in Tamil:-
தமிழ் விடுகதை வினாக்கள்
விடுகதை விளையாட்டு விடைகள்
1. உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான் அவன் யார்?
சந்தனம்
2. மூவராய் சேர்வார்கள் வண்ணம் தீட்டுவார்கள் அவர்கள் யார்?
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
3. கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது அது என்ன?
இளநீர்
4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் அவன் யார்?
சூரியன்
5. சூடுபட்டு சிவந்தவன் வீடுக்கட்ட உதவுவான் அவன் யார்?
செங்கல்
6. நித்தம் கொட்டும் சத்தம் இல்லை அது என்ன?
கண் இமை
7. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி. உரிக்க உரிக்க தோலாண்டி அவன் யார்?
வெங்காயம்
8. விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் அது என்ன?
கடிகாரம்
9. எண்ணும், முள்ளும் இல்லாத கடிகாரம், எவராலும் பார்க்க முடியாத கடிகாரம் அது என்ன?
இதயம்
10. காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது ஆனால் பேசாது. வயிறு பெரியது ஆனால் உண்ணாது அது என்ன?
அண்டா
மேலும் படிக்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்