உடுமலை நாராயணகவி வாழ்க்கை வரலாறு | Udumalai Narayana Kavi History in Tamil
நாம் அனைவரும் சோகத்தில் இருந்தாலும் சரி மகிழ்ச்சியான நிலையில் இருந்தாலும் சரி நம் உணர்வை வெளிப்படுத்துவதற்கு இசை வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இப்பொழுது எப்படி இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் மேலும் பல இசைக்கலைஞர்கள் இருக்கிறார்களோ அதே போன்று முக்காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மேலும் பல இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான உடுமலை நாராயண கவியை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இவர் சினிமா பாடல்கள் மட்டுமின்றி நம் தாய்நாட்டிற்காக பல தேசப்பாடல்களும் இயற்றியுள்ளார். சரி வாங்க இவரை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
Udumalai Narayana Kavi – பிறப்பு:
உடுமலைபேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி 1899-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி செட்டியார், தாயின் பெயர் முத்தம்மாள் ஆவர். இவருடைய இயற்பெயர் நாராயணசாமி ஆகும். நாராயண கவி என பெயர் வைத்து கொண்டு கவிஞர் இனமென்று அடையாளம் வைத்துக்கொண்டார். 5-ம் வகுப்பு வரை திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார். பெற்றோர்கள் 12-வது அவருடைய வயதில் இயற்கை எய்தினார்கள்.
About Udumalai Narayana Kavi in Tamil:
- பின் அவரது சொந்தக்காரர் வீட்டில் இருந்து கொண்டு கைத்தொழில் செய்து கொண்டிருந்தார். இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் ஆரிய கான சபையில் நாடக கலைஞராக இருந்தார். பின் தவத்திரு.சங்கரதாஸ் அவர்களிடம் முறையாக நாடக கலையை கற்று நாடகம் போட ஆரம்பித்தார்.
- பின் இவருக்கும் பேச்சியம்மாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் வறுமையின் காரணமாக மதுரை சென்று எம்.எம்.சிதம்பரநாதன் அவர்களின் உதவியால் நாடக பாடல்களை எழுதி கொடுத்தார். பின் பேச்சியம்மாளும் அவரது குழந்தைகளும் நாராயணசாமியின் பிரிவை தாங்க முடியாமல் மதுரையில் இருந்து நாராயணசாமியை உடுமலைபேட்டைக்கு அழைத்து வந்தனர்.
வாணிதாசன் வாழ்க்கை வரலாறு |
உடுமலை நாராயணகவி வரலாறு:
- பின் கிராமஃபோன் கம்பெனியில் உள்ள நாராயண ஐயருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. நாராயண ஐயரின் உதவியால் அந்த கம்பெனிக்கு பாடல் எழுதி கொடுக்க ஆரம்பித்தார். Director ஏ.நாராயணன் அவர்கள் இவருடைய கவி திறமையை கண்டு நாராயண கவியை படங்களுக்கு பாட்டு எழுதி கொடுக்க வைத்தார்.
- பின் கல்கத்தாவிற்கு சென்று முதன் முதலாக கிருஷ்ணன் தூது என்ற படத்திற்கு பாடல்கள் எழுதி கொடுத்தார். பின் கல்கத்தா ராயல் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான தூக்கு தூக்கி எனும் படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.
Udumalai Narayana Kavi Padalgal:
தூக்கு தூக்கி படத்தில்
- குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,
- பெண்களை நம்பாதே- கண்களே பெண்களை நம்பாதே
- சுந்தரி சௌந்தரி நிரந்தரியே……
மாங்கல்ய பாக்கியம் படத்தில்
- ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்
- என்றே தேறுவது அறிவாகும் அது
- நன்றேயாகுமென உணர்ந்திடாது-
- மக்கள் உன்றே கூறுவது தவறாகும்……
Udumalai Narayana Kavi:
- 1936-ம் ஆண்டிற்கு பின்னர் உருவான வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா, பிரபாவதி, காவேரி போன்ற பல திரைப்படங்களுக்கு பாட்டு எழுதினார். சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்ற நண்பர்களுக்கும் பாடல் எழுதி கொடுத்திருக்கிறார்.
- இவரது பாடல்கள் கருத்து மிக்கவையாகவும், அறியாமையில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அதனால் இவருடைய பாடல்கள் மக்களை வெகுவாக கவர ஆரம்பித்தன.
- ஆரம்பத்தில் இறைவனுக்காக பாடல்கள் எழுதியவர். பாரதியாரின் நட்பு கிடைத்த பின்னரே தேசப்பாடல்கள் எழுத தொடங்கினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு`கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கினார்.
கரிகால் சோழன் வரலாறு |
உடுமலை நாராயண கவி – பெருமைகள்:
- முக்காலத்திலேயே பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் போன்றவர்களுடன் நட்பு கொண்டிருந்தார்.
- நாராயண கவி அவர்கள் நற்குணங்கள் மற்றும் நற்பண்பு உடையவராகவும் இருந்தார். மற்றவர்களுக்கு என்ன உதவியாயினும் அதை செய்து கொடுக்க கூடியவராகவும் இருந்தார்.
- தனது கவிதை மற்றும் இசையின் மூலம் அனைவருக்கும் தேசிய உணர்வையும், சமுதாய கருத்துக்களையும் கூறியவர் ஆவார். இவரது பெருமையை போற்றும் விதமாக இந்திய அரசு 31.12.2008 அன்று தபால் துறையில் தபால் தலை வெளியிட்டுள்ளது.
- கோயம்புத்தூரில் இவரது நினைவாக மணிமண்டபம் உள்ளது, மார்பளவு சிலை மற்றும் அவரது புகைப்படங்கள் கண்காட்சியாக உள்ளது.
மறைவு :
1979-ல் உடுமலைப்பேட்டை பூவிளைவாடி கிராமத்திற்கு திரும்பி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். இவ்வளவு பெருமையை அடைந்த கவிஞர் நாராயணசாமி 23-ம் தேதி மே மாதம் 1981-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |