“உலை வாயை மூடலாம் ஆனால் ஊர் வாயை மூட முடியாது” இந்த பழமொழிக்கான அர்த்தம் என்ன..?

Ulai Vaayai Moodinalum Oor Vaayai Mooda Mudiyathu 

Ulai Vaayai Moodinalum Oor Vaayai Mooda Mudiyathu 

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக பழமொழிகளின் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். சரி நாம் அனைவருமே பழமொழிகளை புத்தகத்தில் படித்திருப்போம். அதுபோல சிலர் கூறி நாம் கேட்டிருப்போம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கிண்டலாக ஏதாவது ஒரு பழமொழியை கூறுவார்கள். அதை கேட்கும் போது நமக்கு சிரிப்பாக இருக்கும். ஆனால் நாம் அதற்கு பின் இருக்கும் விளக்கத்தை தெரிந்து கொள்ள மாட்டோம். அந்த வகையில் இன்று உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

“கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு” பழமொழியின் உண்மை காரணம்..!

Ulai Vaayai Moodinalum Oor Vaayai Mooda Mudiyathu in Tamil:

அந்த காலத்தில் இந்த பழமொழியை அதிகம் கூறுவார்கள். ஏன் இந்த காலத்திலும் ஒரு சில கிராமங்களில் வசிக்கும் வயதானவர்கள் இந்த பழமொழியை கூறி வருகிறார்கள். இந்த பழமொழிக்கான விளக்கத்தை இங்கு பார்ப்போம்.

சாதம் வடிக்கும் போது அது கொதிக்கையில் அதில் இருந்து அனல் வரும். அந்த அனலை குறைவாக வைப்பதற்காக அதில் ஒரு மூடியை போட்டு மூடி வைப்போம். அப்படி செய்யும் போது சாதம் பொங்கி வராமல் அதை சமைத்து விடலாம்.

அதுபோல நாம் நம்மை பற்றிய ஒரு ரகசியத்தை ஒருவரிடம் கூறினால், அந்த ரகசியத்தை அவர் 10 பேரிடமாவது சொல்வார்கள்.

அப்படி அவர் சொன்னால் தான் அவருக்கு தூக்கம் வரும். இப்படி சொல்லும் போது ஊர் முழுக்க அந்த விஷயத்தைப் பற்றி தான் பேசுவார்கள்.

அதற்காக தான் அந்த காலத்தில் உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்று சொன்னார்கள். அதாவது, சாதம் பொங்கி வருவதை கூட நிறுத்தி விடலாம், ஆனால் இழிவாக பேசும் வாயை நிறுத்த முடியாது என்று சொன்னார்கள். இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம் இது தான்.

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?
ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று கூறுவதற்கான அர்த்தம் என்ன .?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil